ஜிஎஸ்டி வரி குறைஞ்சாலும்.. இன்சூரன்ஸ் விலை குறையாது.. ப்ரீமியத்தை உயர்த்த போகும் நிறுவனங்கள்
டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கான வரி விகிதத்தை 18% இல் இருந்து பூஜ்ஜியமாக குறைத்தது. இந்த முடிவால் காப்பீட்டு பிரீமியங்கள் கடுமையான விலை குறையும். ஆனால் இதை தடுக்கும் விதமாக காப்பீடுதாரர்களுக்கு பிரீமியம் விலையை உயர்த்த 5% வரை உயர்த்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தொழிற்துறை வல்லுநர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது, கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வரி மாற்றம் காரணமாக ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 5% வரை உயர்த்தக்கூடும் என்று தெரிவித்து உள்ளது.

அந்த அறிக்கையில், சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 3-5% அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிறுவனங்கள் தற்போது பெற்றுவரும் உள்ளீட்டு வரிக் கடனால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய உதவும் என்று அது மேலும் தெரிவித்தது. மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி குறைப்பு, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் செலவழிக்கும் தொகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் இந்த வரி குறைப்பு, பொருளாதார ரீதியாக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம்
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 அன்று ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை தீபாவளிப் பரிசாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி குறைப்பு விரைவுபடுத்தப்பட்டது. இருப்பினும், பண்டிகைக் காலங்களில் மக்கள் விலை குறைப்பை எதிர்பார்த்து வாங்குவதைத் தவிர்க்காமல் இருக்க, தீபாவளிக்கு முன்பே இதை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்து செயல்பட்டு உள்ளது. செப்டம்பர் 22 முதல் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம் அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டிற்கு இனி ஜிஎஸ்டி கிடையாது. உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் பெரும்பாலான மருந்துகளுக்கும் குறைந்த ஜிஎஸ்டி பொருந்தும், இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும்.
அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் (UHT Milk), இனி ஜிஎஸ்டி வரியில் இருந்து முழுமையாக விலக்கு பெறுகிறது. இது நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். முன்பே பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பன்னீர் (சேனா) இனி வரி விலக்குடன் கிடைக்கும். ஏற்கனவே சில்லறையாக விற்பனை செய்யப்படும் பன்னீர் வரி விலக்குடன் இருந்தது. ரொட்டி, சப்பாத்தி, பராத்தா, புரோட்டா உள்ளிட்ட அனைத்து இந்திய ரொட்டி வகைகளும் இனி ஜிஎஸ்டி வரி இல்லாமல் விற்பனை செய்யப்படும். இது இந்த உணவுப் பொருட்களின் விலையை குறைக்கும்.
உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் இனி ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற்றுள்ளன. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் அரிய மரபணு நோய்களுக்கான மருந்துகள் ஜிஎஸ்டி வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி அமலாக்கம்
ஜிஎஸ்டி அமலாக்கம் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். புதன்கிழமை அவர் கூறுகையில், "முன்பு மாநிலங்கள் யுபிஏ அரசை நம்பாததால், யுபிஏ ஆட்சியில் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியவில்லை.. இப்போது நாங்கள் அதை முறைப்படுத்தி வருகிறோம்" என்றார்.
மேலும், "இந்த வரி குறைப்புகளை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டும்" என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை காங்கிரஸ் விமர்சித்தால், அது மக்கள் விரோத கட்சி என மக்களால் கருதப்படும் என பாஜக நம்புகிறது. "அவர்கள் மக்கள் முன் அம்பலப்படுத்தப்படுவார்கள்" என்று சீதாராமன் தெரிவித்தார். இது எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் காங்கிரசுக்கு கடுமையான சவாலாக அமையும்.












Click it and Unblock the Notifications