ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்.. செப்டம்பர் 3,4 தேதிகளில் டெல்லியில் கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
டெல்லி: செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் வரி சீர் திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 5, 12, 18, 28 என்று 4 விகிதங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் இருக்கும் என்று அறிவித்தார். இதன் மூலமாக ஜிஎஸ்டி வரி பிடித்தத்தில் மிகப்பெரிய மாற்றம் வரப் போவதாக தெரிய வந்தது.

அந்த வகையில் 12 மற்றும் 28 ஆகிய வரி விகித பிடித்தங்களை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு வரி சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை அனுப்பியது. இதுகுறித்து ஆய்வு நடத்துவதற்கு அமைச்சர் குழு ஒன்றையும் நியமனம் செய்தது.
கடந்த சில நாட்களாக இந்த குழு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டது. அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று சில கருத்துக்களை எடுத்துரைத்தார். இதன்பின் நேற்று மத்திய அரசின் வரி சீர் திருத்தங்களுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இதற்கான அடுத்தக் கட்டமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த பரிந்துரைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அதில் இந்த வரி சீர்திருத்தம் நடைமுறை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் ஜவுளி பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணி மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளிக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு ஏற்ப தீபாவளிக்கு முன்பாகவே மக்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக 12 சதவிகித ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் 5 சதவிகிதத்திற்கு கீழாகவும், 28 சதவிகித ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படும் பொருட்கள் 18 சதவிகிதத்திற்கும் வந்துவிடும். இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் விலை குறைய வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications