மோடி சொன்னாரே தீபாவளி பரிசு காத்திருக்குனு..இன்று டெல்லியில் முக்கிய மீட்டிங்! மக்களுக்கு இனிக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதாக உறுதி அளித்தார் .அதாவது சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்கள் நாட்டுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் எனக் கூறி இருந்தார். இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கவிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு வரி குறைப்பு அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல அத்யாவசிய பொருட்களின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) தொடர்பான முக்கிய மாற்றங்கள் பற்றி ஆலோசிக்க, இன்று (செப்டம்பர் 3) மற்றும் நாளை (செப்டம்பர் 4) என இரண்டு நாட்கள் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். பொதுமக்களின் வாழ்வில் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் பொருட்களின் மீதான வரிகளை குறைப்பது தொடர்பான முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

GST Council Meeting

மோடியின் தீபாவளி பரிசு

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தாண்டு தீபாவளிக்கு முன் மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி இருக்கும். GST வரி குறைப்பு மூலம் பொதுமக்கள் நேரடி நன்மையை அடைவார்கள்" என்று உறுதி அளித்திருந்தார். அதற்கேற்ப மத்திய அமைச்சரவை, GST விகிதங்களை மாற்றும் தீர்மானத்திற்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஜிஎஸ்டி

2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்த GST, தற்போது 4 பிரிவுகளாக அதாவது 5%, 12%, 18%, 28% என பிரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்கள் இந்த பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 12% மற்றும் 28% என உள்ள இரண்டு பிரிவுகளை நீக்கி, GST-யை 5% மற்றும் 18% என்ற 2 பிரிவுகளாகக் குறைப்பதற்கான ஆலோசனை நடப்பதாகக் கூறப்படுகிறது. இதில், 12% வரியில் உள்ள பொருட்கள் 5%-க்கும், 28% வரியில் உள்ளவை 18%-க்கும் மாற்றப்பட வாய்ப்பு அதிகம் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விலை குறையும் பொருட்கள்

இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், ஆடை, வாகன உதிரிபாகங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தினசரி தேவைகள் கணிசமாக விஐ குறையும். குறிப்பாக, 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக விலை அதிகமாக இருந்த எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலைகள் குறைவது உறுதி என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

நிபுணர்கள் கருத்து

"GST அடுக்குகளை எளிமைப்படுத்துவது, வரி வசூல் முறையை வெளிப்படையாக மாற்றும். இது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். குறிப்பாக, பொதுமக்கள் வாழ்வில் நேரடி நிவாரணம் கிடைக்கும்" என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தீபாவளிக்கு முன்பாக விலை குறையும் என்ற நம்பிக்கையில், சந்தையில் புதிய உற்சாகம் நிலவுகிறது. பொருட்கள் விலை குறையும் செய்தி, பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் ஒரே மாதிரி நிம்மதியை அளிக்கும் வகையில் அமையும். இந்நிலையில், இன்று தொடங்கிய GST கவுன்சில் கூட்ட முடிவுகள் நாளை வெளியாகும். அதுவரை, பிரதமர் மோடி சொன்ன "தீபாவளி பரிசு" எவ்வளவு பெரியதாக இருக்கும் என நாடு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+