குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையம்! பிரதமர் மோடி பயணம் காரணமா?
டெல்லி: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புடன் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் குஜராத் தேர்தல் தேதியை மட்டும் இன்று அறிவிக்கவில்லை.
குஜராத் மாநில சட்டசபையில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன. குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை 92 எம்.எல்.ஏக்கள். குஜராத் சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியுடன் முடிவடைகிறது.
குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக தற்போது பூபேந்திர படேல் பதவி வகித்து வருகிறார். குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிடையேதான் கடும் போட்டி இருந்து வந்தது.

2017 தேர்தல் முடிவுகள்
குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 49.1% வாக்குகளும் காங்கிரஸுக்கு 41.4% வாக்குகளும் கிடைத்தன. இதன் பிந்தைய இடைத்தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. தற்போதைய நிலையில் குஜராத் சட்டசபையில் பாஜகவுக்கு 111 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸுக்கு 62 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

குஜராத்தில் மும்முனைப் போட்டி
2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார். 4 ஆண்டுகள் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதால் அவருக்கு பதில் கடந்த ஆண்டு பூபேந்திர படேல், புதிய முதல்வரானார். இந்த ஆண்டு குஜராத் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸுக்கு சவாலாக ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி உள்ளது. ஆகையால் இம்முறை குஜராத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே தமது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இதுவரை 41 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

குஜராத் கருத்து கணிப்பு
அண்மையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நிலவரம் தொடர்பாக ஏபிபி நியூஸ்- சிவோட்டர் கருத்து கணிப்பு நடத்தியது. அக்கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 135 முதல் 143 இடங்கள்; காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்கள்; ஆம் ஆத்மி கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2017 தேர்தலில் பாஜக 49.1% வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு இம்முறை 45.8%; காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 41.4%-ல் இருந்து 32.3% ஆகவும் குறையும்; ஆம் ஆத்மி கட்சிக்கு 17.4% வாக்குகள் கிடைக்கும் என்றது இக்கருத்து கணிப்பு.

தேர்தல் தேதி அறிவிப்பு இல்லை
இந்த நிலையில் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் மோடிக்காக ஒத்திவைப்பா?
பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார். இதனைத் தொடர்ந்து வரும் 19-ந் தேதி மீண்டும் குஜராத் செல்வார் எனவும் கூறப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் எந்த திட்டத்தையும் அடிக்கல் நாட்டவோ தொடங்கி வைக்கவோ முடியாது. இதனால் பிரதமர் மோடியின் குஜராத் பயணத்துக்கு பின்னர் அம்மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications