குஜராத்தில் பாஜகவுக்கு சவால்.. காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு... ஜிக்னேஷ் மேவானிக்கு செயல் தலைவர் பதவி
டெல்லி: 2022 இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு சவால் அளிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் சுயேச்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி உள்பட 7 பேர் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த முறை நடந்த தேர்தலில் பாஜக 111 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
காங்கிரஸ் 63 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. குஜராத்தில் 5 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. இதனால் மீண்டும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

குஜராத்தில் மும்முனை போட்டி
குஜராத்தை பொறுத்தமட்டில் காலம்காலமாக பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவி வந்தது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மியுடன் சேர்ந்து மும்முனை போட்டி நிலவ உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. இந்த 2 கட்சிகளையும் தவிர்த்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. இதற்காக ஆம்ஆத்மி கட்சி பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளையும் துவக்கி செயல்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம்
குஜராத் மாநிலம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமாகும். இதனால் அங்கு பாஜகவை மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. இதனால் பாஜகவினர் பூத் அளவில் இறங்கி களப்பணி ஆற்றி வருகின்றனர். மேலும் சமீபத்தில் குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரூ.3 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

காங்கிரஸ் வியூகம்
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியும் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக பஞ்சாப்பில் ஆம்ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியும் குஜராத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குஜராத் மாநிலத்தில் நிர்வாகிகள் மாற்றம், புதிய நியமனங்கள் நடைபெற்று வருகிறது.

ஜிக்னேஷ் மேவானிக்கு பொறுப்பு
அந்த வகையில் தற்போது குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் எம்எல்ஏ ஆவார்கள். அதன்படி எம்எல்ஏக்களான லலித் காகதாரா, ஜிக்னேஷ் மேவானி, ருத்விக் மேக்வானா, அம்பரீஷ் ஜே டீர், ஹிமாந்த் சிங் பட்டேல் மற்றும் கதீர் பிர்சாடா, இந்திரவிஜயசிங் கோலி ஆகியோர் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

யார் இந்த ஜிக்னேஷ் மேவானி?
குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. தலித் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் இவர் 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். இவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக டுவிட்டரில் பதிவிட்டதாக கூறி அசாம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தான் ஜிக்னேஷ் மேவானிய காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications