உத்தரகாண்ட்டை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் குஜராத் பாஜக அரசு- குழு அறிவிப்பு!
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்தில் ஆளும் பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் பொது சிவில் சட்ட வரைவை உருவாக்குவதற்கான 5 பேர் கொண்ட குழுவை அம்மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் இன்று அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனப்படி மதங்களின் அடிப்படையில் பல்வேறு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிரானது பொது சிவில் சட்டம். அனைத்து மதத்தினருக்கும் திருமணம், வாரிசுரிமை, விவாகரத்துக்கு ஒரே சிவில் சட்டம்தான் இருக்க வேண்டும் என்கிறது வலதுசாரிகளின் இந்த பொது சிவில் சட்ட முழக்கம். இதனை நாடு முழுவதும் செயல்படுத்துவோம் என்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்று.

இந்த பின்னணியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதாக அறிவித்தது. கடந்த மாதம் 27-ந் தேதி முதல் அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பான இணையதளமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற இடத்தைப் பிடித்தது உத்தரகாண்ட் அரசு.
உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பாஜக ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளன.
பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத் மாநில அரசும் தற்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. பொது சிவில் சட்ட வரைவை உருவாக்குவதற்காக 5 பேர் கொண்ட குழுவை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் இன்று அறிவித்தார். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தமது அறிக்கையை அடுத்த 45 நாட்களில் மாநில அரசிடம் சமர்ப்பிக்கும்; இதனடிப்படையில் மாநில அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் முதல்வர் பூபேந்திர பட்டேல் தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications