தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவியேற்றார்!உச்சநீதிமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்!
டெல்லி: இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இன்று அவர் பதவி ஏற்ற நிலையில் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்தியாவின் தனி அதிகாரம் பெற்ற அமைப்புகளில் ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் தொடங்கி எம்எல்ஏ தேர்தல் வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது.

தேர்தல் காலங்களில் முழுமையான அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் தான் ஞானேஷ்குமார் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்று அவர் பதவியேற்ற நிலையில் 2029 ஜனவரி மாதம் வரை அவர் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் புதிய சட்டம் இயற்றப்படும் வரை தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர்கள் அடங்கிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய புதிய மசோதாவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
அதன்படி தான் கடந்த ஆண்டு இரண்டு தேர்தல் ஆணையர்களும் நேற்று முன்தினம் தலைமை தேர்தல் ஆணையரும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர், ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
49வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அந்த மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து இன்று காலையிலேயே மனுவை விசாரிப்பதாக நீதி அரசர்கள் சூரியகாந்த், கோடீஸ்வர சிங் ஆகியோர் கூறியுள்ளனர்.
ஞானேஷ்குமார்: இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அயோத்தி கோவில் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருந்த போது அந்த ஆவணங்களை கையாண்டது, ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்ட பிரிவு நீக்கம் ஆகியவற்றில் ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு கேரளா ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்த இவர் மத்திய உள்துறை அமைச்சகத்திலும் பணியாற்றினார்.
உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளராக இருந்த அவர், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற விவகாரத்துறை, பாதுகாப்புத்துறை ஆகியவற்றிலும் பணியாற்றி இருக்கிறார். கான்பூரில் பொறியியல் நிறுவனத்தில் பட்டம் பெற்றவர் இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி படிப்பையும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தையும் படித்தவர். இந்த நிலையில் இந்தியாவின் 26 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவி ஏற்கிறார். அவரது பதவிக்காலத்தில் தான் பீகார் சட்டசபை தேர்தல், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகியவற்றின் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளது. மேலும் 2027 இல் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தேர்தல்களையும் அவர் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்.. தேர்தல் பணிகளில் ஈடுபடவும் தடை.. தேர்தல் ஆணையம் உத்தரவு -
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டல் விடுவிப்பு.. துரைகுமார் நியமனம்.. EC அதிரடி -
ஜனாதிபதியிடம் விருது வாங்கியவர்.. சென்னையின் புதிய கமிஷனர்! யார் இந்த அபின் தினேஷ் மோதக்? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா!












Click it and Unblock the Notifications