‛இடிக்குதே’ சரத்பவார் கூறிய அந்த வார்த்தை! இஸ்ரேல் போரில் வெளியுறவு துறையிடம் இருந்து விலகிய மோடி?
டெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போரில் பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் இரு கருத்துகளுக்கும் வித்தியாசம் உள்ளதாகவும், மோடி இஸ்ரேல் பக்கமும், வெளியுறவுத்துறை பாலஸ்தீனம் பக்கமும் இருப்பது போல் தெரிகிறது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சாடியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் கசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் தேதி கடும் மோதல் தொடங்கியது. பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்' இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை தொடுத்தது.

ஒரே நேரத்தில் 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இஸ்ரேலை குலைநடுங்க வைத்தது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார்.
இந்த தாக்குதல் 8வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது. அதேபோல் இஸ்ரேலிலும் பலி எண்ணிக்கை 1000யை கடந்துள்ளது. மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் நாளுக்கும் நாள் இருதரப்புக்கும் இடையேயான மோதல் என்பது வலுவாகி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா உள்பட பல நாடுகள் போரை கைவிட்டு அமைதி திரும்ப பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளன.
இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மோதலில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளார். கடந்த 7 ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்தபோதே அதனை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். அதன்பிறகு பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார். இக்கட்டான இந்த சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என கூறினார்.
இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் குறித்து கூறியிருந்தார். அதன்பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அரிந்தம் பாக்சி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஆகியவை ஒரேபோன்ற கருத்தை பிரதிபலித்தன.
அதாவது ‛‛இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாலஸ்தீனம் என்ற தனி நாடு இயங்க வேண்டும். பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான சரத்பவார் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்சனையில் பிரதமர் மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியோர் தங்களின் நிலைப்பாட்டை வேறுபடுத்தி உள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
பாலஸ்தீன விவகாரத்தை இந்தியா எப்போதும் ஆதரித்துள்ளது என்பதை வெளிவிவகாரத்து அமைச்சகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. நாங்கள் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக இருப்போம் என்பதை அது காட்டுகிறது. ஆனால் பிரதமர் மோடி இஸ்ரேல் பக்கம் முழு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளோம்.
அரசு ஒரு நிலைப்பாட்டிலும், அமைச்சகம் இன்னொரு நிலைப்பாட்டிலும் இருப்பது இதுதான் முதல் முறை. மேலும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை என்பது தீவிரவமானது. அதோடு சென்சிட்டிவானது. இதனால் இந்த விஷயத்தில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட பிற நாடுகளின் கருத்துகளை புறக்கணிக்க முடியாது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications