ராமேஸ்வரத்தில் விரைவில் பிரம்மாண்ட அனுமன் சிலை.. குஜராத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: 108 அடியிலான அனுமன் சிலை ராமேஸ்வரத்தில் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி முதல் சிலை வடக்கு பகுதியான சிம்லாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
தெற்கே ராமேஸ்வரத்தில் சிலை நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு அண்மையில் பணிகள் தொடங்கின. 2ஆவது சிலை குஜராத் மாநிலம் மோர்பி நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இந்தியாவின் மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. 108 அடி உயரம் கொண்ட இந்த சிலையை அமைக்கும் பணி ரூ 10 கோடி மதிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத்தில் உள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அப்போது மோடி பேசுகையில் உங்கள் அனைவருக்கும், நாட்டு மக்களுக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் அனுமனின் இந்த பிரமாண்ட சிலை இன்று மோர்பியில் திறக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
அனுமன் அனைவரையும் தனது பக்தியால், தனது சேவையால் இணைக்கிறார். அனைவரும் உத்வேகம் பெறுகிறார்கள். ராமேஸ்வரத்திலும் நாட்டின் கிழக்கு பகுதியான மேற்கு வங்கத்திலும் அனுமன் சிலைகள் நிறுவப்படும் என நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Inaugurating a 108 feet statue of Hanuman ji in Morbi, Gujarat. https://t.co/6M0VOXXPmk
— Narendra Modi (@narendramodi) April 16, 2022
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications