கிசான் கிரெடிட் கார்டு திட்டம்.. 5 மாநிலங்களில் வருகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி! விவசாயிகள் குஷி
டெல்லி: விவசாயிகள் பயன்பெறும் வகையில், முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.. குறிப்பாக கிசான் கிரெடிட் கார்டு குறித்து நிதியமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று, கடந்த ஜூன் மாதத்துவக்கத்தில் ஆட்சி அமைத்த மோடி அரசின் 3வது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் இதுவாகும்.

நிர்மலா சீதாராமன்: நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.. அதாவது, தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளார்..
எப்போதுமே ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2024-25ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் பெற்றது.
விவசாயிகள்: இன்றைய தினம் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும், முக்கியமாக விவசாயிகள் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்திவரும் மத்திய அரசு, கிசான் கிரெடிட் கார்டின் வரம்பை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இப்படிப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 5 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்..
இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. காரணம், மிக மிக குறைந்த வட்டியில், விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடிய திட்டம் இதுவாகும். விவசாயம் தொடர்பான பணிகளுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொறுத்து, இந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப்படுவது இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பாகும்.
கால்நடை வளர்ப்பு: இந்த திட்டத்தின் மூலம், விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பிற்கான கடன் தேவைகளை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம். ஒரு விவசாயி 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்...
இப்போது கிசான் கிரெடிட் கார்டின் கீழ் ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் 7 சதவீத வட்டியில் கிடைக்கிறது. இதில் 3 சதவீத மானியமும் அடங்கும். அதாவது கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் 4 சதவீத வட்டியில் கடன் பெறுகிறார்கள்... இந்த கிசான் கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் கடன் வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சமீபகாலமாகவே மத்திய அரசுக்கு விவசாயிகள் விடுத்தபடி உள்ளனர்.
சபாஷ்: இன்றைய பட்ஜெட்டில், வேளாண் உற்பத்தி அதிகரிப்பில் அரசு கவனம் செலுத்தும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் முதல்கட்டமாக 5 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது, விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல், பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.. அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு தயார் செய்வோம் என்றும் மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு MSP உறுஉறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்திருப்பது கவனம் பெற்று வருகின்றன












Click it and Unblock the Notifications