ஆம் ஆத்மிக்கு ஹர்பஜன் சிங் கல்தா! பகவந்த் மான் அவ்வளவு போன் அடிச்சும் எடுக்கல.. பாஜக பார்த்த வேலை!
டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகவ் சதா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் இணைந்து ஹர்பஜன் சிங்கும் பாஜகவில் இணைந்திருக்கிறார்.
முன்னதாக ஹர்பஜன் சிங்கை சமாதானப்படுத்த, பஞ்சாப் முதல் பகவந்த் மான் தொடர்ந்து போன் அடித்திருக்கிறார். ஆனால், அதை அவர் வேண்டும் என்றே அவாய்ட் செய்திருக்கிறார்.

ஹர்பஜன் சிங் கட்சியை விட்டு விலகக்கூடும் என்ற தகவல் கிடைத்ததும், அவரை சமாதானப்படுத்த முதல்வர் முயன்றதாகத் தெரிகிறது. ஆனால், தற்போது ஹர்பஜன் சிங் மும்பையில் ஐபிஎல் வர்ணனையாளராகப் பணியில் இருப்பதால், அவர் போனை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
என்னதான் இப்படியான காரணங்கள் சொல்லப்பட்டாலும், முதல்வர் போன்ற மூத்த தலைவர்கள் போன் அடிக்கும்போது, அதற்கு ரெஸ்பான்ஸ் இல்லையெனில், கட்சி தாவல் உறுதியாகிவிட்டது என்றே அர்த்தம்.
கடந்த 2022ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அதே ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் சேர்ந்ததற்காக, ஆம் ஆத்மி இவ்வளவு செய்து கொடுத்தாலும், ஹர்பஜன் சிங் கட்சி பணிகளில் பெரியதாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
கிரிக்கெட்டில், குறிப்பாக மேட்ச் வர்ணனையில் கவனம் செலுத்தி, கட்சி பணிகளை தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் கட்சி எடுக்கும் முக்கியமான முடிவுகளின் பின்னணி குறித்து அவருக்கு தெரியவில்லை. எனவே, ஒவ்வொரு முடிவிலும் உடன்படாமல் இருந்திருக்கிறார்.
இப்படியாகத்தான் அவர் இன்று பாஜகவில் இணைந்திருக்கிறார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு, தற்போது ஹர்பஜன் சிங் போன்ற நட்சத்திர முகங்கள் விலகிச் செல்வது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications