கொரோனா தொடர்பான.. உச்சநீதிமன்ற வழக்கில் இருந்து.. அதிரடியாக விலகிய மூத்த வழக்கறிஞர்.. ஏன் தெரியுமா?
டெல்லி: உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்த கொரோனா தொடர்பான வழக்கில் இருந்து மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே அதிரடியாக விலகி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக கடுமையாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

கொரோனா தடுப்பூசிக்கும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தப் பிரச்னைகள் குறித்து, பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பல்வேறு மாநில நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளின் தீர்ப்புகள் குழப்பமாக இருப்பதால் கொரோனா தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டோ(இன்று ஓய்வு பெற்று விட்டார்) தலைமையில் நீதிபதிகள் அமர்வு முடிவெடுத்தது. ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்துகள் வினியோகம், தடுப்பூசி வழங்கும் முறைகள் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் 'அமிகஸ் கியூரியாக' வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவின் உதவியை நாடியுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஹரிஷ் சால்வே 'அமிகஸ் கியூரியாக' நியமனம் செய்வதற்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் தரப்பில் அதிருப்தி நிலவியதாக கூறப்படுகிறது. பல நீதிபதிகள் ஹரிஷ் சால்வேவை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று உச்ச நீதிமன்றம் எடுத்த கொரோனா தொடர்பான வழக்கில் 'அமிகஸ் கியூரி' நியமனத்தில் இருந்து ஹரிஷ் சால்வே அதிரடியாக விலகி உள்ளார்.
இது தொடர்பாக மூத்த நீதிபதி ஹரிஷ் சால்வே கூறுகையில், ' இந்த நீதிமன்றம் ஆராயும் மிக முக்கியமான வழக்கு இது. இந்த வழக்கு ஒரு நிழலின் கீழ் முடிவு செய்யப்படுவதை நான் விரும்பவில்லை.எனக்கு எந்த சைட்ஷோவும் தேவையில்லை என்று கூறினார். மூத்த நீதிபதி ஜெனரல் துஷர் மேத்தா ''சால்வே இந்த வழக்கில் இருந்து விலக வேண்டாம். இதுதுபோன்ற அழுத்தம் தந்திரங்களுக்கு யாரும் அடிபணியக்கூடாது" என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications