Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறிபோன பதக்கம்.. வினேஷ் போகத் விவகாரம்.. "நாட்டு மக்களுக்கு உண்மை தெரியணும்.." யோகேஷ்வர் தத் பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்குக் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தேர்தலில் களமிறங்குகிறார். ஒலிம்பிக் போட்டியில் அவர் பதக்கத்தைத் தவறவிட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், சக மல்யுத்த வீரரான யோகேஷ்வர் தத் இது தொடர்பாக சில பரபர கருத்து களை தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் எப்போதும் மல்யுத்தத்திற்குப் பெயர் பெற்றது. நமது நாட்டின் மல்யுத்த வீரர், வீராங்கனைகளில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். இப்போது மல்யுத்த வீரர்கள் விளையாட்டைத் தான் ஹரியானா அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

haryana assembly election 2024 haryana election 2024 bjp 2024 2024 politics

ஹரியானா தேர்தல்: பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் இறுதிப் போட்டி தகுதி பெற்றார். இருப்பினும், இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூடுதல் எடையைக் காரணமாகச் சொல்லி வினேஷ் போகத்தைத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அது அப்போது நாடு முழுக்க பேசுபொருள் ஆனது.

இந்த தகுதி நீக்கத்திற்குப் பிறகு மல்யுத்த போட்டிகளில் இருந்தே மொத்தமாக ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். இருப்பினும், நாடு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், ராகுல் காந்தி முன்னிலையில் வினேஷ் போகத்தும் பஜ்ரங் புனியாவும் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

யோகேஷ்வர் தத்: இதற்கிடையே சக மல்யுத்த வீரரும் பாஜக பிரமுகருமான யோகேஷ்வர் தத் சில கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது பதக்கத்தை இழந்ததற்காக நாட்டு மக்களிடம் வினேஷ் போகத் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஒலிம்பிக் சமயத்திலும் சரி மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் போதும் சரி வினேஷின் செயல்பாடுகள் தவறாகவே இருந்ததாகவும் யோகேஷ்வர் தத் தெரிவித்தார். இது குறித்து பிரபல இந்தி ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், "அவருக்கு வேறு சில ஆசைகள், திட்டங்கள் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள் உண்மையை அறிய வேண்டும்.

பிம்பம்: கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் நடந்த எல்லா விஷயங்கள் குறித்தும் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அது ஒலிம்பிக் போட்டிகளில் நடந்தவையாக இருந்தாலும் சரி, போராட்டமாக இருந்தாலும் சரி. மக்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது. புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட போது, ​​நாட்டின் மீது தவறான பிம்பம் பூச முயற்சிகள் நடந்தன. இதை நாம் மறுக்க முடியாது.

ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். தன் மீதான தவறை ஒத்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக அவர் சதி செய்தார்கள்.. அது இது என்று எல்லாம் பேசினார். நாட்டின் பிரதமரைக் கூட குற்றம் சாட்டினார்.

மன்னிப்பு கேட்கணும்: ஒரு கிராம் அதிகம் இருந்தாலும் தகுதியிழப்பு நிச்சயம் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தாலும் தவறான செய்திகளை அவர் பரப்பினார். போராட்டத்தின் போது கூட மக்களைத் தவறான வழியில் திசை திருப்பினர். ஒலிம்பிக் பற்றிக் கேட்கிறீர்கள்.. இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய பதக்கத்தைத் தவற விட்ட போதிலும் அவர் தவறான கருத்துகளைப் பரப்பினார். வினேஷின் இடத்தில் நான் இருந்திருந்தால், நிச்சயம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+