பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில் அரசு விடுமுறைப் பட்டியலில் இருந்து ரம்ஜான் பண்டிகை நீக்கம்.. ஏன்?
டெல்லி: பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில் அரசு விடுமுறைப் பட்டியலில் இருந்து ரம்ஜான் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு உடனடியாக நடப்பு ஆண்டு முதல் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அரசு விடுமுறைக்கு பதிலாக அட்டவணை-II இன் கீழ் வரையறுக்கப்பட்ட விடுமுறையாக ரம்ஜான் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேவைப்படுபவர்கள் மட்டும் இந்த விடுமுறையை வரும் மார்ச் 31ம் தேதி எடுத்துக் கொள்ளலாம்.
ஹரியானாவில் ரமலான் பண்டிகை, ஈத்-உல்-பித்ர் தினம் என்ற பெயரில் அரசு விடுமுறையாகப் பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஹரியானா அரசு தனது விடுமுறை பட்டியலை தற்போது திருத்தியுள்ளது, ஈத்-உல்-பித்ரை அட்டவணை-II இன் கீழ் வரையறுக்கப்பட்ட விடுமுறையாக மாற்றியுள்ளது. நிதியாண்டு இறுதி விடுமுறையைக் காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த நாளில் விடுப்பு பெறலாம் என்று ஹரியான அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது இந்த விடுப்பை எடுக்க விரும்புவோர் மட்டும் அதனை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஹரியானா தலைமைச் செயலாளர் அனுராக் ரஸ்தோகி வெளியிட்ட உத்தரவின்படி, டிசம்பர் 26, 2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு தற்போது திருத்தப்பட்டுள்ளது. மார்ச் 31, 2025 அன்று அனுசரிக்கப்படும் ஈத்-உல்-பித்ர், அரசிதழ் விடுமுறைக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) நாளாக கருதப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகள் வார இறுதியில் வருவதாலும், மார்ச் 31 2024-25 நிதியாண்டின் இறுதி நாளாக இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஹரியானா அரசாங்கத்தின் இந்த முடிவின் படி, ரமலான் பண்டிகைக்கான விடுப்பை, மற்றவர்கள் அதனை விருப்ப விடுப்பாக இந்த ஆண்டு மார்ச் 29, சனிக்கிழமை, 30 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 31 ம் தேதி 2024 - 25 நிதியாண்டின் இறுதி நாளிலும் எடுத்துக் கொள்ளலாம். விடுப்பு திருப்பம் தொடர்பான நகல், அனைத்து முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஹரியானா அரசின் இந்த முடிவை பாஜக ஆளும் இதர மாநிலங்களும் கடைப்பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரமலான்கொண்டாடப்படும் நிலையில், இது 2024-25 நிதியாண்டின் கடைசி நாளுடன் ஒத்துப்போகிறது. நிதியாண்டு இறுதி நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை காலக்கெடு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த தேதியில் கட்டாய விடுமுறையை ரத்து செய்து, விருப்ப விடுமுறையாக மாற்றி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications