ஹரியானா விவசாயிகள் பாஜக பக்கம்தான் என்பதை நிரூபித்துவிட்டனர்: பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: ஹரியானா மாநில விவசாயிகளை காங்கிரஸ் தூண்டிவிட்ட போதும் அவர்கள் பாஜகவுக்குதான் ஆதரவு தெரிவித்துள்ளனர்; ஹரியானாவில் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோரை தூண்டிவிட்ட போதும் அவர்களும் பாஜகவையே ஆதரித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸின் மோசமான தோல்வியால் கூட்டணி கட்சிகள் கவலைப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினரிடையே பிரதமர் மோடி இன்று பேசியதாவது:
எந்த ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துவிட்டால் அந்த மாநில மக்கள் நீண்ட காலத்துக்கு பாஜகவையே ஆதரிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன? 2011-ம் ஆண்டுதான் கடைசியாக அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அதன் பிறகு காங்கிரஸ் அரசு அமையவே இல்லை. நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு நோ எண்ட்ரி போர்டு வைத்துவிட்டனர். நவராத்திரியின் 6-வது நாளான இன்று 3-வது முறையாக தாமரையை மலரச் செய்துள்ளனர் ஹரியானா வாக்காளர்கள்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாட்டை பலவீனப்படுத்தவே விரும்புகிறது. ஹரியானா விவசாயிகளைத் தூண்டிவிட்டனர்; ஆனால் ஹரியானா விவசாயிகளோடு நாட்டுடனும் பாஜகவுடன் இருக்கிறோம் என தேர்தலில் பதிலடி தந்துவிட்டனர். அதேபோல தலித்துகள், இதர பிற்படுத்தப்ப்ட்ட ஜாதியினரையும் தூண்டிவிட காங்கிரஸ் முயற்சித்தது. அவர்களும் கூட நாட்டுடனும் பாஜகவுடனும் இருக்கிறோம் என தெரிவித்துவிட்டனர்.
இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் இந்தியாவின் நிறுவனங்களுக்கு எதிரான சர்வதேச சதியில் காங்கிரஸும் கை கோர்த்து விளையாடி வருகிறது. இத்தகைய சதிகளுக்கு ஹரியானா மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஹரியானாவில் டபுள் என்ஜின் அரசின் 10 ஆண்டுகால செயல்பாடுகளை ஏழை மக்கள் பார்த்து வருகின்றனர். இலவச மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கான்கிரீட் வீடுகள் என அனைத்தும் தந்துள்ளோம். ஹரியானாவின் ஏழை மக்களுக்கு அனைத்தும் வழங்கி இருக்கிறோம். உலக சந்தைகளில் ஹரியானாவுக்கான இடத்தை பாஜக அரசு உருவாக்கி தரும்.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் கவலையடைந்துவிட்டன. காங்கிரஸ் மோசமான தோல்வியைத் தழுவியதால் தங்களுக்கான வெற்றி இடங்கள் குறைந்து போனதுதான் அந்த கவலைக்கு காரணம். கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. லோக்சபா தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் தயவிலேயே காங்கிரஸ் பாதி இடங்களில் வென்றது. மக்களை சொந்த கலாசாரம் மீதே வெறுப்பு கொள்ள வைக்கிறது காங்கிரஸ். நாட்டின் தேசிய நிறுவனங்கள் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது காங்கிரஸ். தேர்தல் ஆணையம், காவல்துறை, நீதித்துறை அனைத்துக்கும் களங்கம் கற்பிக்கிறது காங்கிரஸ்.

லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் எத்தகைய அமளியில் ஈடுபட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். லோக்சபா தேர்தலின் போதும் காங்கிரஸும் அர்பன் நக்சலைட்டுகளும் உச்சநீதிமன்றத்துக்கு போய் தேர்தல் ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தனர். இப்போதும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது காங்கிரஸ். இதுதான் காங்கிரஸ் கலாசாரம்.
ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்படாமல் இருந்திருந்தால் காஷ்மீர் இன்னமும் அழகானதாக இருந்திருக்கும் என சிலர் பேசுகின்றனர். ஜம்மு காஷ்மீர் இப்போதுதான் ஊரடங்கு காலத்தை விட்டு வெளியே வந்துள்ளது; பிரிவினைவாதத்தில் இருந்து விலகி நிற்கிறது. ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் நிலை நிறுத்தி இருக்கிறோம். இதற்காக அண்ணல் அம்பேத்கருக்கு மிகப் பெரும் நன்றியை தெரிவிக்கிறோம்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications