உங்கள் பான் கார்டை பயன்படுத்தி உங்களுக்கே தெரியாமல் கடன் வாங்க முடியும்.. இதை தடுப்பது எப்படி?
உங்கள் பான் கார்டை பயன்படுத்தி உங்களுக்கே தெரியாமல் கடன் வாங்க முடியும்.. இதை தடுப்பது எப்படி?
டெல்லி: உங்கள் பான் கார்டை பயன்படுத்தி உங்களுக்கு தெரியாமல் யாராவது கடன் வாங்கி இருக்கிறார்களா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.
இந்தியாவில் கடன் வழங்கும் நிறுவனமான இந்தியாபுல்ஸ்சின் தானி ஆப் மீது கடந்த ஆண்டு பெரும் சர்ச்சை வெடித்தது. தானி ஆப், பான் கார்டு தகவல்களை திருடி, அவர்களுக்கே தெரியாமல் மற்றவர்களுக்கு கடன் கொடுத்தாக செய்திகள் வெளியாகி சர்ச்சைகள் வெடித்தது.
பான் கார்டு வைத்திருப்பவர்கள், அவர்களின் பான் எண்ணில் தெரியாத நபருக்கு அவர்களின் சம்மதத்தைக் கேட்காமலேயே கடன் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பான வழக்குகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

எப்படி ஏமாற்றம்
தானி ஆப் மூலம் வழங்கப்பட்ட இத்தகைய மோசமான கடன்கள், மோசடி செய்பவர்களால் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றப்பட்டுள்ளது. வேறு ஒருவரின் பான்கார்டில் அவர்களுக்கே தெரியாமல் கடனை வாங்கி விட்டு திருப்பிச்செலுத்தாமல் மோசடியாளர்கள் எஸ்கேப் ஆவதால், கடனே வாங்காமல் அவர்களின் CIBIL ஸ்கோர் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக டுவிட்டரில் பெரிய அளவில் கடந்த ஆண்டு சர்ச்சை வெடித்தது.

மோசடி ஓட்டைகள்
இந்நிலையில் சைபர் குற்றவாளிகள் இந்த பான் கார்டு கடன் மோசடியை எப்படி செய்யுறாங்க என்று டெல்லியைச் சேர்ந்த சைபர் கிரைம் நிபுணர் அமித் துபே கூறுகையில், "தானி ஆப் மற்றும் சில இணைய வழி கடன் வழங்கும் மொபைல் ஆப்கள், வெறும் பான் கார்டு மற்றும் மொபைல் எண்ணை சமர்ப்பிப்பதாலே சிறிய அளவிலான கடனை வழங்குகின்றன. ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒருவரின் மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பதால், பணப் பரிமாற்றம் செய்யப்படும். பான் கார்டும், வங்கி கணக்கும் இணைக்கப்படாமல் வேறு வேறாக இருந்தாலும் சிறிய தொகை கடன் என்பதால் அப்படியே சில வங்கிக் கணக்குகளுக்கு பணம் போய்விடும். எனவே, ஆப் மூலம் கடன் வழங்கும் , ஃபின்டெக் தளங்களில் சிறிய அளவிலான கடன்களை எந்த பரிசோதனையும் இன்றி விரைவாக வழங்குதால், அது ஆன்லைன் மோசடி செய்பவர்களால் பயன்படுத்தப்படும் ஓட்டையாக மாறிவிட்டது" என்றார்.

எப்படி தடுப்பது
இதுபோன்ற சைபர் கிரிமினல்களின் இத்தகைய பான் கார்டு மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து அமித் துபே கூறுகையில், "முதலில், ஒருவர் தனது பான் மற்றும் ஆதார் எண்ணை தெரியாத நபர்களிடமோ அல்லது தெரிந்த நபரிடமோ பகிர்ந்து கொள்ளக்கூடாது, ஏனெனில் இந்த ஆவணங்கள் மிகவும் ரகசியமானது. இந்த ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தக்கூடிய இடங்களில் பகிரும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.எனவே, ஒருவர் தனது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையின் புகைப்பட நகலைப் பகிர்வதற்கு முன்பு யோசிக்க வேண்டும். எதற்காக பகிர்கிறீர்கள் என்பதை அதன் ஓரத்தில் எழுதிவிடுங்கள். இது போன்ற மோசடிகளை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை இது நிராகரிக்கும்.

எந்த ஆப்கள்
இது தவிர, பான் கார்டு வைத்திருப்பவர்கள், ஒருவரின் கடன் விவரங்களையும், சிபில் ஸ்கோரையும் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். CIBIL, Equifax, Experian அல்லது CRIF High Mark போன்ற எந்தவொரு கிரெடிட் நிறுவன சேவைகளிலும் உள்ளே சென்று உங்கள் பெயருக்கு எதிராக எடுக்கப்பட்ட கடன்களின் விவரங்களைக் கண்டறிய இந்த நாட்களில் CIBIL மதிப்பெண் மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம்" இவ்வாறு கூறினார். Paytm மற்றும் PolicyBazaar ஆப்ஸ் போன்ற fintech நிறுவனங்களின் இணையதளங்கள் மூலமும் ஒருவர் கடன் விவரங்களைச் சரிபார்க்கலாம். Paytm போன்ற ஃபின்டெக் ஆப்ஸ்கள் பயனர்களுக்கு CIBIL ஸ்கோரை உடனடியாக ஒருவரின் கடன் விவரங்களுடன் வழங்கி வருகின்றன. எனவே கவனமாக பான் கார்டு மற்றும் ஆதர் கார்டை பயன்படுத்துங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications