நாட்டியே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வழக்கு... சிபிஐ ஏற்றது!!
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் உயர் வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் என்னுமிடத்தில் பூல்கர்ஹி என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, டெல்லியில் இருக்கும் சப்தார்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இறந்தார்.

இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து மத்திய அரசுக்கு உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்து இருந்தார். இதை ஏற்று சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான ஆணையை இன்று மத்திய நிர்வாகம் மற்றும் பயிற்சி துறை இன்று பிறப்பித்துள்ளது. வரும் நாட்களில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும்.
இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் வலியுறுத்தி இருந்தனர். மேலும், அந்தப் பெண்ணின் உடலை குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் நடு இரவில் எரித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர்.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தலித் பெண் உடல் முடக்கப்பட்ட நிலையில், அவரது வீடு அருகே இருந்து மீட்கப்பட்டது. முதலில் இவர் ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனை மற்றும் அலிகார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது வாக்குமூலத்தில், உயர் வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெறித்ததாக தெரிவித்து இருந்தார். இந்த நான்கு இளைஞர்களும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.

தடவியல் மற்றும் பிரேத பரிசோதனையில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்று உத்தரப் பிரதேச போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications