ரோஹித் சர்மாவை கைது பண்ணீட்டாங்களா?..போலீசுடன் சோகமாக இருக்கும் படத்தை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, போலீஸ் அதிகாரியுடன் சோகமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்து ரோஹித் சர்மாவை கைது செய்துவிட்டார்களா? என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கின்றனர்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2-வது டி 20 போட்டி நேற்று முன் தினம் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரை வென்றது.

காவல்துறை அதிகாரியுடன் ரோகித்

காவல்துறை அதிகாரியுடன் ரோகித்

இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் பதிவிட்டு வந்தனர். இதற்கு மத்தியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, காவல்துறை அதிகாரி பொன்ஜித் தோவாராவுடன் நிற்கும் புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவியது. ரோஹித் சர்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை துணை ஆணையரான பொன் ஜித் தோவ்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

சிரித்த முகத்துடன் இல்லையே

சிரித்த முகத்துடன் இல்லையே

பெஸ்ட் ஆப் லக்.. கண்டிப்பாக ஒரு சதம் என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை அவர் வெளியிட்ட சில மணி நேரங்களில் 11 ஆயிரம் லைக்குகளும் மற்றும் ஏராளமான கமெண்டுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர். அதிலும் சில நெட்டிசன்கள், ரோஹித் சர்மா கைது செய்யப்பட்டாரா? என்றும் சந்தேகம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர். சில நெட்டிசன்கள் கூறுகையில், ''இந்த படத்தில் யாருமே சிரித்த முகத்துடன் இல்லையே ஏன்?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

கைது செய்து விடாதீர்கள்

கைது செய்து விடாதீர்கள்

அதேபோல், மற்றொரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், ரோஹித் சர்மா கைது செய்யப்பட்டது போல் தெரிகிறது? என்று பதிவிட்டு இருந்தார். அதேபோல், ரோஹித் சர்மா ஏன் இவ்வளவு சீரியசாக இருக்கிறார்... எங்கள் ரோஹித் சர்மாவை கைது செய்து விடாதீர்கள்.. என்று கருத்துக்களில் கலகலப்பாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒருவர் இந்த படத்தை முதலில் பார்க்கும் போது ரோஹித் சர்மா கைதாகிவிட்டார் என தான் நினைத்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

டேவிட் மில்லர் சதம் வீண்

டேவிட் மில்லர் சதம் வீண்

நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் டேவிட் மில்லர் சதம் அடித்து கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனாலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு தோல்வியே மிஞ்சியது. எனினும், 47 பந்துகளில் 106 ரன்கள் அடித்து மிரட்டிய டேவிட் மில்லரும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+