Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: HDFC வங்கியின் தலைவராக இருந்த அத்தனு சக்கரவர்த்தி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் தனது ராஜினாமா கடிதத்தில், வங்கியில் நடக்கும் சில நடைமுறைகள் தனது நெறிமுறைகளுக்கு ஒத்துவரவில்லை என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுவே இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்தியாவில் மிகப் பெரிய தனியார் வங்கியாக இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளையும் சேர்த்தால் எஸ்பிஐ-க்கு பிறகு சுமார் ரூ. 12.97 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன், எச்டிஎஃப்சி வங்கி இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஹெச்.டி.எஃப்.சியின் பங்குச்சந்தை செயல்பாடு சிறப்பாக இல்லை.

HDFC Bank Chairman Resigns Atanu Chakraborty Cites Ethical Practices Clash Shares Crash nearly 5

அத்தனு சக்கரவர்த்தி ராஜினாமா

இதற்கிடையே HDFC வங்கியின் தலைவரும், சுதந்திர இயக்குநருமான அத்தனு சக்கரவர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பொதுவாக இதுபோல மிக முக்கிய பதவியில் இருக்கும் நபர்கள் இப்படி திடீரென ராஜினாமா செய்ய மாட்டார்கள். அது வங்கியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து, அடுத்த தலைமையைத் தேர்வு செய்யும் வரை உடன் இருப்பார்கள். ஆனால், சக்கரவர்த்தி உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.

அதை விட அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கிய பதவிகளில் இருப்போர் ராஜினாமா செய்யும்போது, அதற்கான காரணங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், சக்கரவர்த்தி அதுபோல எந்தவொரு தெளிவான காரணத்தையும் கூறவில்லை. மாறாக மறைமுகமாக ஏதோ சில விஷயங்களைச் சொல்ல வருவது போலக் குறிப்பிட்டிருந்தார்.

சில நடைமுறைகள்

வங்கியின் சீரமைப்பு, நியமனம் மற்றும் ஊதியக் குழுத் தலைவருக்குச் சக்கரவர்த்தி இது தொடர்பாகக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர், "வங்கியின் சில நிகழ்வுகளும், நடைமுறைகளும் எனது தனிப்பட்ட மதிப்புகளுக்கும் நெறிமுறைகளுக்கும் முரணாக உள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் நான் கவனித்த சில நிகழ்வுகளும் நடைமுறைகளும் எனது தனிப்பட்ட விழுமியங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் முரணாக உள்ளன. இதுவே எனது ராஜினாமா முடிவுக்கு அடிப்படை காரணம். மேற்கண்ட காரணங்களைத் தவிர ராஜினாமாவுக்கு வேறு முக்கிய காரணங்கள் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து என்ன

திடீர் ராஜினாமாவுக்கான குறிப்பிட்ட விவரங்களைச் சக்கரவர்த்தி வெளியிடவில்லை. எனினும், வங்கியின் செயல்பாடுகள் தொடர்பாக இயக்குநர்கள் குழுவில் சில காலமாகவே கருத்து வேறுபாடுகள் நிலவியதாகக் கூறப்படுகிறது. சக்கரவர்த்தியின் திடீர் பதவி விலகலைத் தொடர்ந்து கிவி மிஸ்ட்ரியை எச்டிஎஃப்சி வங்கியின் இடைக்காலப் பகுதிநேரத் தலைவராக நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று மார்ச் 19 முதல் மூன்று மாத காலத்திற்கு கிவி மிஸ்ட்ரி ஹெச்டிஎஃப்சி வங்கியை வழிநடத்துவார். மிஸ்ட்ரி இதற்கு முன்பு எச்டிஎஃப்சி லிமிடெட்டின் துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்?

HDFC வங்கியில் இருந்து விலகியுள்ள அத்தனு சக்கரவர்த்தி குஜராத் கேடரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். இவர் கடந்த 2019-20ல் மத்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரத் துறை செயலாளராகப் பணியாற்றினார். இதற்கு முன் குஜராத் அரசில் நிதித்துறை செயலாளராகவும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தது குறிப்பிடத்தக்கது.

சக்கரவர்த்தியின் இந்த திடீர் ராஜினாமாவால் HDFC வங்கி பங்குச்சந்தையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. காலை 11.30 மணியளவில் சுமார் 41 ரூபாய் சரிந்து, அதாவது கிட்டத்தட்ட 5% சரிந்து, ரூ.801க்கு அதன் பங்குகள் வர்த்தகமாகின.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+