கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.. ஆம் ஆத்மி விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு பெரிய ‘தலைவலி’!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட இருப்பதாக வரும் தகவல்கள், 'இந்தியா' கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் 'இந்தியா' கூட்டணி உருவாகியுள்ளது. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்துள்ளன. மாநிலங்களில் பல்வேறு பிணக்குகள் இருந்தாலும், பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை கட்டமைக்கும் நோக்கத்துடன், ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவையும், இந்தக் கூட்டணியில் உள்ளன.

'இந்தியா' கூட்டணி: காங்கிரஸ் கட்சிக்கும், பல்வேறு மாநிலங்களில் பிரதான கட்சிகளாக இருப்பவைகளுக்கும் இடையே அரசியல் ரீதியாக பல முரண்பாடுகள், மோதல்கள் உள்ளன. எனினும், பல்வேறு தலைவர்களின் தீவிர முயற்சியால், முரண்பாடுகளுக்கு மத்தியில் கூட்டணி கட்டி எழுப்பப்பட்டது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி, ஊழல் புகார் நெருக்கடியில் சிக்கித் தவிப்பது 'இந்தியா' கூட்டணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த பிப்ரவரியில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைதுசெய்து சிறையில் அடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் எஃப்.ஐ.ஆரின்படி மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தது.
தலைவலி: இந்நிலையில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இன்று அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன்பு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர், மத்திய பிரதேசத்துக்கு சென்றுள்ளார். விசாரணைக்கு ஆஜராகும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியினர் கூறி வந்த சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, ஆம் ஆத்மி அரசு மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படும் சூழல் ஆகியவற்றால், ஆம் ஆத்மி கட்சி, 'இந்தியா' கூட்டணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழல் வழக்குகள், 'இந்தியா' கூட்டணிக்கு எதிரான பாஜகவின் தாக்குதல் என்கிற ரீதியில், 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது. பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை: ஆனால், காங்கிரஸ் உட்பட, 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுக்கவில்லை. ஆம் ஆத்மிக்கு ஆதரவாக கடுமையாகக் குரல் எழுப்பவில்லை. ஊழலுக்கு துணைபோவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கவும் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. கிட்டத்தட்ட, 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்து, பாஜக வெற்றி பெறலாம் என நினைக்கிறது என ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பேசினார். ஆனால், ஆம் ஆத்மி தங்களின் கூட்டணிக் கட்சி என்கிற ரீதியில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஸ்ட்ராங்காக குரல் எழுப்பவில்லை. ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் வலிமையான ஸ்டாண்டை எடுக்காமல், மிதவாதப் போக்கில் செயல்பட்டு வருகிறது 'இந்தியா' கூட்டணி. இதனால், கூட்டணி கட்சிகளுக்குள் நல்ல இணக்கம் இல்லாமல் போகவும், அதனால், நாடாளுமன்றத் தேர்தலில் சிக்கல்கள் வரவும் கூடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
கட் அண்ட் ரைட்டா: அதேசமயம், ஆம் ஆத்மி கட்சி 'இந்தியா' கூட்டணியில் தொடர்ந்தால், பாஜக, ஊழல் கூட்டணி என 'இந்தியா' கூட்டணியை விமர்சித்து பிரச்சாரத்தை முன்னெடுக்கக்கூடும். ஊழல் - வாரிசு அரசியல் கூட்டணி என பாஜக ஏற்கனவே இந்தியா கூட்டணியை விமர்சித்து வரும் சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம், பாஜகவினர் வாய்க்குக் கிடைத்த அவல் பொறி ஆகியுள்ளது. எனவே, ஆம் ஆத்மி கட்சி விஷயத்தில் 'இந்தியா' கூட்டணி கட் அண்ட் ரைட்டாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்காக அதிரடியாக களமிறங்குமா 'இந்தியா' கூட்டணி?.. போகப் போகத் தெரியும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications