வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமெடுத்திருக்கிறது. இந்நிலையில், ஆக்சிஜன், படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை இயக்குநர் ஜெனரல் (DGHS) டாக்டர் சுனிதா சர்மாவின் தலைமையில் ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

india COVID-19 coronavirus

இதில், பேரிடர் மேலாண்மை பிரிவு, அவசர மேலாண்மை பிரிவு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் அதிகாரிகள் (IDSP) மற்றும் டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்று தற்போதைய தொற்று பரவல் நிலைமை மற்றும் தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

சுவாச பிரச்சனை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படும் இணைநோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் பாசிட்டிவ் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 4,302 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 864 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பாதிப்புகள் லேசானவை என்றும், வீட்டிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனவரி 1 முதல் 44 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானோர் ஏற்கனவே உடல்நலக் குறைவு உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஆக்சிஜன், தனிமைப்படுத்தும் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும், இருமல், காய்ச்சல் இருக்கும்போது நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், கடுமையான சுவாச நோய் உள்ளவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிகுறிகள் மோசமானால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+