Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குலையே நடுங்கிருச்சு".. லிஃப்ட்டில் வேலைக்கார பெண்ணை.. பதற வைத்த வீடியோ.. 24 மணி நேர "பிணைக்கைதி"

லிப்ட்டில் வேலைக்கார சிறுமியை தாக்கிய பெண்ணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காண்போரை பதற செய்து வருகிறது.. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்றாலும், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் பெருகி வருகிறது.

நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக வடமாநிலங்களில் இது அதிகம் நடந்து வருகிறது.. இளம்பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது

சில சமயம், பெண்களே பெண்களுக்கு பெருத்த எதிரியாகிவிடுவது அதற்கு மேல் கொடுமையாக உள்ளது.. அப்படித்தான் டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. டெல்லியின் நொய்டாவில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது..

அப்பார்ட்மெண்ட்

அப்பார்ட்மெண்ட்

இந்த அப்பார்ட்மென்ட்டில் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள்தான் வாழ்ந்து வருகிறார்களாம். அனிதா என்ற 20 வயது இளம்பெண், ஷெபாலி கவுல் என்ற பெண்ணின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இந்நிலையில், இந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள லிப்டில், அனிதாவை, ஷெபாலி கவுல் கடுமையாக தாக்கும் வீடியோதான் வெளியாகி உள்ளது.. அனிதாவின் முடியை பிடித்து தரதரவென இழுத்து போட்டு அடிக்கிறார்.. அவரது தலை முடியை பிடித்திழுத்து, கழுத்தை இறுக்கியும், மறுபடியும் தாக்குகிறார்.. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளன.. இதை பார்த்த பலரும், அதிர்ச்சியடைந்துள்ளனர்..

 ரணம், காயங்கள்

ரணம், காயங்கள்

ஷெபாலி கவுல் எப்போதுமே, இளம்பெண் அனிதாவை மனசாட்சியே இல்லாமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.. இரவு பகலும் என்று கூட பாராமல், அனிதாவை வேலை வாங்கி வந்துள்ளார்.. தினமும் அனிதாவை, ஏதாவது ஒரு காரணம் சொல்லி அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.. அதிலும், அனிதா, தன்னுடைய வீட்டிற்கு செல்ல முயற்சிக்கும்போதெல்லாம், உடம்பு ரணமாய் வீங்கிவிடுமாம்.. தன்னுடைய வீட்டுக்கு போகணும் என்று அனிதா சொன்னாலே, உடம்பு பழுத்துவிடுமாம்.. வலுக்கட்டாயமாக இழுத்து போட்டு எட்டி எட்டி உதைப்பாராம் ஷெபாலி.. 24 மணி நேரமும் அனிதாவை பிணைக் கைதியை போல் வைத்திருந்துள்ளார்.

ரணங்கள்

ரணங்கள்

ஒருகட்டத்துக்குமேல் பொறுக்க முடியாமல், சம்பவத்தன்று வீட்டில் இருந்து கிளம்பி லிப்ட்டில் வெளியே முயன்றுள்ளார்.. ஆனால், அதற்குள் பின்னாடியே வந்துவிட்டார் ஷெபாலி.. அனிதா வீட்டுக்கு போவதை அறிந்து, தரதரவென வெளியே இழுத்துப்போட்டு தாக்கி உள்ளார்.. ஏற்கனவே, அனிதாவின் உடம்பெல்லாம் நிறைய காயங்களும், ரணங்களும் உள்ளன.. மகளை தாக்கும் வீடியோ வெளியானதை பார்த்ததும், பெற்ற தாய் பதறியடித்து கொண்டு, போலீசுக்கு சென்றுள்ளார்.. ஷெபாலி மீது புகாரும் தந்துள்ளார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 பிணைக்கைதி

பிணைக்கைதி

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி சாத் மியா கான் சொல்லும்போது, "தன்னுடைய மகளை பிணைக்கைதியாக ஷெபாலி கவுல் என்ற பெண், பிடித்து தாக்கியதாக அவரது தாயார் எங்களிடம் புகார் கூறினார். தாயாரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. ஷெபாலி கவுல், 24 மணி நேர ஒப்பந்தத்தின் பேரில், 20 வயது சிறுமி அனிதாவை வீட்டு வேலை செய்வதற்காக அழைத்து சென்றார். ஆனால், ஷெபாலி அனிதாவை அடிக்கத் தொடங்கினார்.. இரவும் பகலும் வீட்டு வேலைகளைச் செய்ய வைத்து, சிறுமியை அடித்து உள்ளார்... 6 மாதங்களாக தன்னை பிணைக் கைதியாக வைத்திருந்ததாக அனிதா எங்களிடம் குற்றம் சாட்டியுள்ளார்... ஷெபாலியிடம் விசாரணை நடக்கிறது" என்றனர்.

FIR போட்டாச்சு

FIR போட்டாச்சு

கொடூர தாக்கிய ஷெபாலி கவுல் மீது எப்ஐஆர் தற்போது பதியப்பட்டுள்ளதாம்.. இதை பற்றி கூடுதல் காவல் துணை ஆணையர் சொல்லும்போது, "பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் உதவியுடன் இது பற்றி முதல் கட்ட தகவல்களும் பெறப்பட்டுள்ளன.. மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. எப்ஐஆரும் பதியப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.. இதை தவிர இதற்காகவே தனி வீடியோ ஒன்றையும், துணை ஆணையர் பேசி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.. இந்த வீடியோவை பார்த்ததும், ஷெபாலி கவுல், அதில் கமெண்ட் செய்துள்ளார்..

தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை

"என் மீது தவறான குற்றச்சாட்டு, அந்த பெண் என் சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளை கலந்து தந்தாள்.. என் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் திருடிக்கொண்டு விட்டாள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார். ஷெபாலி கவுலின் இந்த கமெண்ட்டை பார்த்ததும், ட்விட்டர்வாசிகள் அவரை சரமாரியாக கேள்வி கேட்க துவங்கிவிட்டனர்.. "சரி, அனிதா திருடியதாகவே வைத்து கொண்டாலும், அவருக்கு தண்டனை தர நீங்கள் யார்? முதலில் சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியது யார்? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவரை பணியிலிருந்து நீக்கியிருக்கலாம், அல்லது போலீசில் புகார் தர வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு, ஏன் அடித்து துன்புறுத்தினீர்கள்?" என்று கேட்டுள்ளனர்.

ப்ளீஸ் வேணாம்

ப்ளீஸ் வேணாம்

இதற்கும் பதில் சொல்லி உள்ளார் ஷெபாலி கவுல்.. "நீங்கள் சொல்வது போல, நான் அனிதாவை துன்புறுத்தியிருந்தால், அவள் எப்படி என் வீட்டில் 2 வருடங்களாகவே வேலை பார்த்து வர முடியும்? என்று கேட்டுள்ளார். இப்படியே வாக்குவாதம் வளர்வதால், சிலர் தலையிட்டு, யாரும் கமெண்ட் போட வேண்டாம், போலீசார் பார்த்துகொள்வார்கள், விசாரணை நடக்கட்டும் என்று சொல்லவும், இந்த விஷயம் எல்லாரும் ட்விட்டரில் அதற்கு ஆமோதித்துள்ளார்கள்.. கடந்த 2020-முதல் அனிதா வேலை பார்த்து வந்தாலும், கடைசி 6 மாதங்கள்தான் 24 மணி நேர வேலையில் இருக்கிறாராம்.. அதற்கு முன்பு வரை 12 மணி நேர பணியில் இருந்தாராம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+