டெல்லியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் உயிரிழந்த கணவர்
ஆக்ரா: ஆக்ராவில் கொரோனா பாதித்த கணவரை வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி சுவாசிக்க வைக்கும் மனைவியின் புகைப்படங்கள் காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன. எனினும் கணவர் இறந்துவிட்டார்.
Recommended Video
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் 7ஆம் பிரிவை சேர்ந்தவர் ரேணு சிங்கால். இவரது கணவர் ரவி சிங்கால் (47). இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு திடீரென வீட்டில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து ரேணு சிங்கால், ரவி சிங்காலை சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். ஆட்டோவில் அழைத்து வரப்பட்ட ரவி சிங்காலின் உடல்நிலை மோசமடைந்தது.

மூச்சுத்திணறல் அதிகம்
அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. இதனால் கணவரின் நிலையை கண்டு கலங்கிய ரேணு அழுது கதறினார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. மருத்துவமனையில் வெளியில் ஆட்டோவில் இத்தம்பதி இருந்தனர். இதையடுத்து ரேணு ரவியின் வாயோடு வாய் வைத்து தனது மூச்சுக்காற்றை கொடுத்தார்.

உடல்நிலை
எனினும் ரவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் இறந்தார். இதனால் ரேணு தனது கணவரின் உடலை கண்டு கதறி அழுதார். இது பார்ப்போரை கலங்கடித்தது. டெல்லியில் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டாலும் படுக்கைகள் கிடைக்காமலும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

மருத்துவமனை
கொரோனாவின் இரண்டாவது அலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் மூச்சுத்திணறலுடனும் உடல்நிலை மோசமடைந்தும் மருத்துவமனைகளுக்கு வரும் நபர்கள் படுக்கைகளும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டையும் காரணமாக காட்டி திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

கூட்டம்
டெல்லியில் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அது போல் இறந்தவர்களை தகனம் செய்ய இடம் இல்லாத நிலையில் டோக்கன் கொடுக்கப்பட்டு சுடுகாடுகளில் சடலங்கள் காத்திருக்கின்றன. ஆங்காங்கே சடலங்கள் எரிவதால் தலைநகர் டெல்லியே பற்றி எரிகிறது.












Click it and Unblock the Notifications