அடுத்த 3 நாட்கள் முக்கியம்.. நாடு முழுக்க.. தீவிர கனமழை பெய்ய போகிறது.. எங்கு எல்லாம் தெரியுமா?
டெல்லி: இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பின்படி அடுத்த 2-3 நாட்களுக்கு தீவிர அல்லது மிக தீவிர கனமழை பெய்யும். வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும்.
வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. அரபிக்கடலில் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் ஈரப்பதம் நிலவி வருகிறது.

மழை தீவிரம்
இதனால் நாடு முழுக்க பல இடங்களில் தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வடஇந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் மிக தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய இந்தியாவில் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எங்கு பெய்யும்
இமாச்சல பிரதேசம் , உத்தரகாண்ட் , பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தர பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இங்கு இன்று மாலையில் இருந்து தீவிரமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தீவிரமாக மழை பெய்துவிட்டு, பின் போக போக மழை அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

இடி மின்னல்
அதேபோல் மிக மோசமான இடி மின்னல் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. சூறாவளியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற பகுதியை பொறுத்தவரை குஜராத், கோவா , கொங்கணி, மகாராஷ்டிரா ஆகிய பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும். அதிலும் மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் மிக தீவிரமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

தென்னிந்தியா எப்படி
அதேபோல் ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு சூறாவளியுடன் கூடிய மழை பெய்யும்.தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திர பிரதேசம் தெலுங்கானாவில் தீவிரமான கனமழை பெய்யும். கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் மழை பெய்யும். மேலும் தமிழகத்தில் கடலோர பகுதியில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
-
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications