இந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணம்.. இத்துடன் 2022-இல்தான்.. கிரகணம் பற்றிய சுவாரஸ்யங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணமாகும். இத்துடன் 2022-ஆம் ஆண்டுதான் இந்தியாவில் தென்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்

    கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணிக்கு முடிந்தது. சுமார் 6 மணி நேரம் நடக்கும் இந்த வானியல் அதிசயத்தை காண கோள் அரங்கங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்வு ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய கடல், ஐரோப்பின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரியும். இந்த கிரகணம் பகல் 12.10 மணிக்கு உச்சத்தை அடையும். இந்த ஆண்டின் முதல் கிரகணம் இன்று நடைபெறுகிறது.

    கடைசி கிரகணம்

    கடைசி கிரகணம்

    இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி கிரகணம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. புஜ்ஜில் உள்ள நேரு பிளேனடோரியத்தில் 9.58 மணிக்கு சூரிய கிரகணம் தெரியும் என்றும் திப்ருகாரில் 2.29 மணிக்கு இது முடிவடையும். அடுத்த 28 மாதங்களில் இந்த சூரிய கிரகணம் மட்டுமே இந்தியாவில் தென்படும் சூரிய கிரகணமாகும்.

    நெருப்பு வளையங்கள்

    நெருப்பு வளையங்கள்

    இத்துடன் இந்தியாவில் அக்டோபர் 25ஆம் தேதி 2022ஆம் ஆண்டு மட்டுமே அடுத்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காணமுடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது நிலவு 70 சதவீதம் மறைக்கப்படும். சூரிய கிரகணத்தை நேரடியாக காண்பது கண்களுக்கு பாதிப்பை கொடுக்கும். நெருப்பு வளையங்களை தொடர்ந்து பார்க்க முடியாது.

    சூரியன்

    சூரியன்

    கிரகணம் உச்சமடையும் போது மட்டுமே இதை பார்க்க முடியும். கிரகணத்தின் உச்சத்தின் போது சூரியன் பிறை வடிவில் தெரியும். இது வருடாந்திர சூரிய கிரகணம் என்பதால் சூரியனை நிலவு நடு பக்கத்தில் மறைத்தபடியே இருக்கும் என்பதால் வானத்தில் ஒரு வளையம் போல் காட்சி தரும். ஏனெனில் நிலவு பூமியிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. எனவே அதனால் சூரியனை மொத்தமாக மறைக்கும் அளவுக்கு செய்ய முடியாது.

    வேலூரில் தெரியும்

    வேலூரில் தெரியும்

    சென்னையில் ஒரு பகுதி சூரிய கிரகணத்தை காண முடியும். அதாவது காலை 10.22 மணி முதல் பிற்பகல் 1.41 மணி வரை காணமுடியும். கிரகணம் உச்சத்தை அடையும் போது சூரியனின் 34 சதவீதத்தை நிலவு மறைத்து கொள்ளும். தமிழகத்தில் வேலூர், கோவை ஆகிய பகுதிகளில் கிரகணத்தை காண முடியும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+