டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் வெற்றிக்காக தர லோக்கலுக்கு இறங்கும் அரசியல்வாதிகள்.. பரபரக்கும் 5 மாநில தேர்தல்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள கட்சியினர் அதன் வெற்றிக்காக செய்யும் காரியங்களை பார்த்தால் இப்படியும் தர லோக்கலுக்கு இவர்களால் இறங்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது.

ராஜஸ்தான், தெலுங்கானா, மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த மாநிலங்களில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைக்கவும் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரவும் ஜரூராக தேர்தல் பிரசாரங்களில் இறங்கியுள்ளனர்.

அவ்வாறு களமிறங்கும் இவர்கள் தர லோக்கலுக்கு இறங்குவதை பார்க்கும் போது சிரிப்பாகவும் இதை வெற்றி பெற்ற பின்பு ஏன் செய்வதில்லை என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேட்பாளர் பிரசாரத்தின் போதே செருப்பையும் ராஜினாமா கடிதத்தையும் கொடுக்கிறார். இன்னொருவர் வாக்காளர்களின் கால்களுக்கு ஷூபாலிஷ் போடுகிறார்.

[செருப்பாலேயே என்னை அடிங்க.. வாங்கிக்கறேன்.. தெலுங்கானாவை கலக்கும் வேட்பாளர் ]

சுவாரஸ்மான தகவல்கள்

சுவாரஸ்மான தகவல்கள்

இன்னொருவரோ கக்கா போன குழந்தையின் கால்களை கழுவி விட்டு போட்டோவுக்குபோஸ் வேறு கொடுக்கிறார். இப்படி இவர்கள் செய்யும் அலப்பறைகளை நாம் அன்றாடம் பார்த்துதான் வருகிறோம். அந்த வகையில் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.

குடும்பத்தில் சண்டை

குடும்பத்தில் சண்டை

தெலுங்கானாவில் குகட்பள்ளி தொகுதியில் ஜூனியர் என்டிஆரின் சகோதரி நந்தமுரி சுஹாஷினி போட்டியிடுகிறார். அவ்வாறு போட்டியிடும் அவருக்கு ஜூனியர் என்டிஆர் பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி நெடுங்காலமாக இருந்தது. இதுகுறித்து தனது ரசிகர்களிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் தடா போட்டதாக கூறப்படுகிறது. எனினும் குடும்ப உறுப்பினர்களின் நெருக்கடி காரணமாக ஜூனியர் என்டிஆர் 3 நாட்களும் அவரது சகோதரர் கல்யாண் ராம் 2 நாட்களும் பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் பிரசாரம் செய்வதற்கே சண்டை.

மென்டல்

மென்டல்

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் என்றும் பாராமல் மிகவும் கீழ்த்தரமாக மனநோயாளி என தெலுங்கானா முதல்வராக உள்ள கே சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதுபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் எனக்கு ஓட்டு போடாவிட்டால் நான் தூக்கில் தொங்குவேன் என்று மிரட்டுகிறார்.

தூக்கி எறிய வேண்டும்

தூக்கி எறிய வேண்டும்

எனவே 5 மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக எத்தனை படுபாதாளத்துக்கும் இறங்கும் இவர்கள் வெற்றி பெற்றவுடன் மக்கள் இருக்கும் பக்க்ம கூட தலைவைத்து பார்ப்பதில்லை.எல்லாமே அரசியல் ஸ்டென்ட்தான். இது போல் ஸ்டென்ட் அடிப்பவர்களை மக்கள் தூக்கி எறியும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோமாக.

English summary
Here are the some incidents happened because of 5 states assembly election, how politicians work in "ground level".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X