அரை டப்பா பவுடரை எடுத்து தட்டி.. அப்படியே சானு போலவே.. அசத்தும் குட்டி மீரா பாய்!
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவை அப்படியே பார்த்து அதே போல் செய்த சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி தொடங்கின. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
So cute. Just love this. https://t.co/IGBHIfDrEk
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 26, 2021
போட்டி தொடங்கிய முதல் நாளே மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

சானு
இந்த நிலையில் முதல் நாளே பதக்கத்தை தட்டிய சானு நேற்றைய தினம் இந்தியா திரும்பினார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவருக்கு அந்த மாநில அரசு ரூ 1 கோடி பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது அலுவலகத்தில் அழைத்து சானுவை பாராட்டினார்.

பீட்சா பிடிக்கும்
சானுவுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். இத்தனை நாட்களாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருந்ததால் அவர் பீட்சா சாப்பிடுவதை நிறுத்தி வைத்திருந்தார். இனி அடுத்த சாம்பியன் போட்டிக்கு பயிற்சி எடுக்க தொடங்கும் வரை பீட்சாவை சாப்பிடலாம் என தெரிவித்திருந்தார் சானு. இதையடுத்து அவருக்கு பீட்சா உள்ளிட்ட உணவுகள் பாராட்டுவிழாவில் பரிமாறப்பட்டன.

வைரல்
இந்த நிலையில் ஒரு குட்டி மீராபாய் சானுவின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பின்னணியில் ஒரு டிவியில் மீராபாய் சானு வெள்ளி வென்ற வீடியோ ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அப்போது கையில் ஒரு டப்பா பவுடரை எடுத்து பூசி கொண்டார் அந்த சிறுமி.

பளுதூக்கும் போட்டி
பின்னர் மீரா பாயை போல பளுதூக்கி அவர் வென்றவுடன் இவரும் கையை உயர்த்தி மகிழ்கிறார். இந்த வீடியோவை சதீஷ் சிவலிங்கம் என்ற பளுதூக்குதல் வீரர் பகிர்ந்துள்ளார். அவர் ஜூனியர் மீராபாய் சானு இதுதான் இன்ஸ்பிரேஷன்" என பதிவிட்டு சானுவுக்கு டேக் செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த சானுவும் அழகாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது என பதிவு போட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications