ஹிஜாப் பெண் அடக்குமுறையின் அடையாளம்.. ஆண்களையும் அவமதிக்கிறது.. தஸ்லிமா நஸ்ரின் சொல்கிறார்!
டெல்லி: ‛‛ஹிஜாப் என்பது அடக்குமுறையின் அடையாளம். இது பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவமானம்'' என வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. இதேபோல் பிற மாவட்டங்களிலும் கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே போராட்டம் வெடித்தது. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் எதிர்தரப்பினர் காவி ஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.

கர்நாடகத்தில் தொடரும் பிரச்சனை
இந்த அமர்வு வழக்கு விசாரணை முடியும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கர்நாடகத்தில் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். ஆசிரியைகளின் கோரிக்கையை ஏற்று சில மாணவிகள் ஹிஜாப்பை அகற்றி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். சில மாணவிகள் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை. இதை விட்டுக்கொடுக்க முடியாது எனக்கூறி திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஹிஜாப் பிரச்னை இன்னும் முடியவில்லை.

அடக்குமுறையின் அடையாளம்
இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்தவரும், டெல்லியில் வசிப்பவருமான பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மதஉரிமை என்பது அனைவரும் கல்வி பெறுவது தான் என நான் நம்புகிறேன். ஹிஜாப், புர்கா, நிகாப் ஆகியவை அடக்கு முறையின் அடையாளங்கள். முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் ஹிஜாப் அவசியம் என்றும், இன்னொரு தரப்பினர் அவசியம் இல்லை எனவும் நினைக்கின்றனர்.

அறிமுகம் எப்போது
7ம் நூற்றாண்டில் சில பெண் வெறுப்பாளர்களால் ஹிஜாப் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பெண்கள் வெறும் பாலியல் பொருளாக கருதப்பட்டனர். பெண்களை பார்த்தால் ஆண்களுக்கு பாலியல் ஆசை இருக்கும் என்று நம்பினர். இதனால் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிந்தனர். ஆண்களிடமிருந்து தங்களை மறைத்து கொண்டனர்.

பெண், ஆண்களுக்கு அவமானம்
தற்போதைய 21ம் நூற்றாண்டில் பெண்களுக்கும் சமஉரிமை உள்ளதை நாம் அறிந்துள்ளோம். அதனால் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவை அடக்கு முறையின் அடையாளமாக உள்ளது. அதே நேரத்தில் பெண் என்பவர் குழந்தை பெற்றெடுக்கும் நபர் மட்டுமே எனும் நோக்கத்திலான பார்வை புர்காவால் குறைந்துள்ளது என நினைக்கிறேன். இருப்பினும் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவை பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் அவமானப்படுத்துவதாக கருதுகிறேன்'' என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த எழுத்தாளர்
தஸ்லிமா நஸ்ரின் வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர். குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயங்களை தனது எழுத்துக்கள் மூலம் கண்டித்ததால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார். மேலும் பெண்ணியம் தொடர்பாக தொடர்ச்சியாக எழுதி பிரபலமானார். குறிப்பிட்ட மதம் சார்ந்த இவரது எழுத்துக்கள் சர்ச்சையை கிளப்பியதால் மிரட்டல்கள் வந்தன. வங்காளதேசத்தில் இருந்து வெளியேறியவர் அமெரிக்கா, ஐரோப்பா, சுவீடன் நாடுகளில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் குடியேறி டெல்லியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications