துருக்கிக்கு மோடி வைக்கும் அடுத்த ஆப்பு? ரூட் போட்டு கொடுத்த காங்கிரஸ் முதல்வர்.. என்ன அது?
டெல்லி: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. இதன்மூலம் பாகிஸ்தானை கதறவிட்டது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு, துருக்கி உதவி செய்தது. இதனால் நம் நாட்டு மக்கள் துருக்கியை புறக்கணித்து வரும் நிலையில் இமாச்சல பிரதேச காங்கிரஸ் முதல்வர் சுக்வீந்தர் சிங், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து துருக்கி, அஜர்பைஜானில் இருந்து ஆப்பிள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது நடக்கும் பட்சத்தில் துருக்கிக்கு பெரும் பிரச்சனை என்பது ஏற்படும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இதையடுத்து கடந்த 7 ம் தேதி ‛ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானை பதம் பார்த்தன. பாகிஸ்தானின் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு உதவியும் செய்தது.
துருக்கியிடம் இருந்து பாகிஸ்தான் ஏற்கனவே ட்ரோன்களை வாங்கி இருந்தது. ஆனால் நம் நாட்டுடன் மோதல் வெடித்த நிலையில் துருக்கி பாகிஸ்தானக்கு தனது ட்ரோன் ஆபரேட்டர்களை அனுப்பி வைத்தது. அவர்கள் தான் துருக்கி நாட்டின் ட்ரோன்களை பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டை நோக்கி ஏவினர். இந்த தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது. நம் நாட்டுக்கு எதிராக பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்த துருக்கி என்பது சுற்றுலா துறைக்கு மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
நம் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு சுற்றுலா சென்றனர். இந்த ஆண்டும் கோடை விடுமுறையை துருக்கியில் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சென்றதால் நம் நாட்டு மக்கள் துருக்கி சுற்றுலாவை புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். முன்பதிவுகளை ரத்து செய்து வருகின்றனர். அதேபோல் வர்த்தகர்கள் துருக்கி உடனான வர்த்தகத்தை ரத்து செய்து வருகின்றனர். இது துருக்கி பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே தான் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வர் சுக்வீந்தர் சிங்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன்பிறகு பிரதமர் மோடியை சுக்வீந்தர் சிங் தனியாக பேசி தங்களது மாநிலங்களுக்கான நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு பற்றி கோரிக்கை வைத்தார்.
அப்போது சுக்வீந்தர் சிங், துருக்கி மற்றும் அஜர்பைஜானிடம் இருந்து ஆப்பிள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில், ‛‛வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களால் நம் நாட்டின் ஆப்பிள்களின் விலை என்பது வீழ்ச்சியடைந்து வருகிறது என்பது பற்றி பிரதமர் மோடியிடம் பேசினேன். இதனால் ஆப்பிள் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. துருக்கி மற்றும் அஜர்பைஜானில் இருந்து வரும் ஆப்பிள்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நான் கேட்டு கெண்டேன்'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛இந்த கோரிக்கையை கேட்ட பிரதமர் மோடி, ஆப்பிள் இறக்குமதியால் இமாச்சல் பிரதேச ஆப்பிள் விவசாயிகள் நஷ்டமடையாமல் நான் பார்த்து கொள்கிறேன்'' என்று உறுதியளித்தார். நம் நாட்டை எடுத்து கொண்டால் இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் தான் அதிகமாக ஆப்பிள் விளைவிக்கப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து ஆப்பிள்கள் இறக்குதி செய்யப்படுகிறது.
குறிப்பாக ஆண்டுக்கு ரூ.1000 கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரை துருக்கி ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனே புனே வர்த்தகர்கள் துருக்கி ஆப்பிள் இறக்குமதியை நிறுத்தி உள்ளனர். அந்த வரிசையில் துருக்கி ஆப்பிள் இறக்குமதிக்கே தடை விதிக்க வேண்டும் என்று இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் கூறியுள்ளார். இதற்கு பிரதமர் மோடியும் பாசிட்டிவ்வான பதில் சொல்லி உள்ள நிலையில் விரைவில் துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications