இமாச்சல பிரதேசத்தில் நவ.12-ல் தேர்தல்;டிச.8-ல் வாக்கு எண்ணிக்கை! அக்.17 முதல் வேட்பு மனுத் தாக்கல்!
டெல்லி: இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும்; டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 17-ந் தேதி தொடங்குகிறது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 35 இடங்கள். இமாச்சல பிரதேசத்திலும் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. இம்மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவி வகித்து வருகிறார். இமாச்சல பிரதேச சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இமாச்சல் நவ.12-ல் தேர்தல்; டிச.8-ல் வாக்கு எண்ணிக்கை
இந்த நிலையில் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டெல்லியில் அறிவித்தார். இதன்படி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இமாச்சல பிரதேச தேர்தல் அட்டவணை
- வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம் அக். 17
- வேட்பு மனுத் தாக்கல் நிறைவு அக். 25
- வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை அக்.27
- வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசிநாள் அக்.29
- வாக்குப் பதிவு நாள் நவம்பர் 12
- வாக்கு எண்ணிக்கை நாள் டிசம்பர் 8

2017 தேர்தல் வென்ற இடங்கள்
2017-ம் ஆண்டு இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 44 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் வென்றது. பாஜகவுக்கு 48.8% வாக்குகளும் காங்கிரஸுக்கு 41.7% வாக்குகளும் கிடைத்தன. தற்போது இமாச்சல பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 43; காங்கிரஸுக்கு 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

மும்முனை போட்டி- கருத்து கணிப்பு
இமாச்சல பிரதேசத்திலும் பாஜக, காங்கிரஸ் என இருமுனைப்போட்டிதான் இருந்து வந்தது. தற்போது ஆம் ஆத்மி, இந்த மாநில தேர்தல் களத்திலும் இறங்கி உள்ளது. ஆகையால் இமாச்சல பிரதேசத்திலும் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 45; காங்கிரஸ் 29; ஆம் ஆத்மி 1 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்கிறது சி வோட்டர் கருத்து கணிப்பு. கடந்த முறை 48.8% வாக்குகளைப் பெற்ற பாஜக இம்முறை 45.2%; காங்கிரஸ் கட்சி 41.7%-ல் இருந்து 33.9%; ஆம் ஆத்மி கட்சி 9.5% வாக்குகளைப் பெறும் என தெரிவித்திருந்தது இக்கருத்து கணிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications