இமயமலையில் பாய்சன்? ஒரு நொடி மிரண்ட ஆய்வாளர்கள்.. புதிய ஆய்வில் பகீர் தகவல்.. என்ன காரணம்?
டெல்லி: இமயமலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் சில பகீர் முடிவுகள் தெரிய வந்துள்ளது. அதாவது இமயமலையில் உள்ள மழை மேகங்களில் பாய்சன் உலோகங்கள் கலந்திருப்பது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இமயமலை என்றாலே தூய்மையாக இருக்கும் என்றே பலரும் கருதும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் அதற்கு நேர் எதிராக இருக்கிறது.
உலகின் மிகப் பெரிய மலைத்தொடர்களில் ஒன்று இமயமலை. இது இந்தியா, சீனா, நேபாளம் எனப் பல நூறு கிமீ வரை நீண்டுள்ளது. முற்றிலும் பனிப்பாறைகளைக் கொண்ட இந்த இமயமலை, உலகின் தூய்மையான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலையும் மாற ஆரம்பித்துவிட்டது.

இமயமலை பாய்சன்
அதாவது இமயமலையில் பாய்சனை போன்ற நச்சுத்தன்மை இருக்கும் உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இமயமலை மீது மிதக்கும் மேகங்களில் இருக்கும் ஆபத்தை விளக்கும் இந்த புதிய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருக்கிறது. ஒரு காலத்தில் தூய குடிநீரைக் கொண்டிருந்த இந்த இமயமலை, இப்போது மாசடைய ஆரம்பித்துள்ளது. மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுபாடுகள் உலகின் மிக உயரமான மலைப்பகுதியில் பாய்சனாக மாறுகிறது.
இதன் காரணமாகப் புற்றுநோய் முதல் வளர்ச்சி குறைபாடுகள் வரை பல்வேறு உடல்நல ஆபத்துகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் போஸ் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
நச்சு உலோகம்
மேற்கு இமயமலை மற்றும் கிழக்கு இமயமலையின் மீது பருவமழையின் ஆரம்பக் காலத்தில் மேகங்களில் காட்மியம் (Cd), தாமிரம் (Cu), துத்தநாகம் (Zn) போன்ற நச்சு உலோகங்களின் குறிப்பிடத்தக்க அளவு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். கிழக்கு இமயமலைக்கு மேல் உள்ள மேகங்களில் மாசு அளவு 1.5 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
காரணம் என்ன!
இமயமலை அடிவாரத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகரிப்பது, தொழில்துறை நடவடிக்கைகளால் அங்கு கார்பன் வெளியேற்றம் அதிகரிக்கும் நிலையில், அதுவே இமயமலை மேகங்களை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். டாக்டர் சனாத் குமார் தாஸ் தலைமையிலான இந்த ஆய்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ரொம்ப ஆபத்து
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கே ஆபத்து மோசமாக இருக்கிறது. அங்குப் பெரியவர்களை விடக் குழந்தைகளுக்கு 30% அதிக உடல்நல அபாயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த ஆபத்தான உலோகங்கள் நமது உடலில் சென்றால் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான நோய்ப் பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
மேகத்தில் கரைந்துள்ள இந்த நச்சு உலோகங்கள் நமது உடலில் கலக்கும்போது, அதாவது சருமத்துடன் தொடர்பு ஏற்படுத்துவது, மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பது மற்றும் மழைநீர் அருந்துவதன் மூலம் மனித அமைப்புகளுக்குள் நுழைகின்றன. அப்போது அவை மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தூய்மை இல்லை
மேலும், கரைந்த குரோமியம் (Cr) நமது உடலில் செல்லும்போது அது புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டியது. சீனா, பாகிஸ்தான், இத்தாலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய மேகங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவே மாசை கொண்டிருக்கும் போதிலும், இந்த கண்டுபிடிப்புகள் இமயமலை மழை மேகங்கள் தூய்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications