ஹிண்டன்பர்க்: செபி தலைவருக்கு எதிராக நாடு முழுவதும் ஆக.22-ல் காங்கிரஸ் போராட்டம்- அதிரடி அறிவிப்பு!
டெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை முன்வைத்து செபி தலைவர் மாதவி புரி புச் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன தலைமையிலான மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடுகள் தொடர்பாக அண்மையின் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சி தரக் கூடிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் இந்திய பங்குச் சந்தைகள் ஒழுங்காற்று அமைப்பான செபியின் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவர் அதானி குழுமத்தின் பல போலியான நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்தது அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

செபி தலைவருக்கு எதிரான ஹிண்டன்பர்க்கின் இந்த அறிக்கை பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. ஆனாலும் செபி தலைவர் மாதவி புரி புச் மற்றும் அதானி குழுமங்கள் இந்த குற்றச்சாட்டுகளை வழக்கம் போல மறுத்துள்ளன. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமும் இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செபி தலைவர் மாதவி புரி புச் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ந் தேதி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் பொதுச்செயலாலர் கேசி வேணுகோபால் கூறியதாவது: டெல்லியில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார்.
இன்றைய கூட்டத்தில் நாட்டின் மிகப் பெரிய ஊழலான அதானி மற்றும் செபி தலைவர் மாதவி புரி புச் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்; செபி தலைவர் மாதவி புரி புச் பதவி விலக வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மாநில தலைநகரங்களிலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக ஆகஸ்ட் 22-ந் தேதி போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு கேசி வேணுகோபால் தெரிவித்தார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications