‛‛பாபர் ரோடு’’.. போர்ட்டை பார்த்ததும் ‛அயோத்யா மார்க்’ என ஸ்டிக்கர் ஒட்டிய ஹிந்து சேனா - பரபரப்பு
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ‛பாபர் ரோடு' என எழுதி வைக்கப்பட்ட போர்ட்டில் ஹிந்து சேனா அமைப்பினர் இன்னொரு பெயரில் ஒட்டிய ஸ்டிக்கரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் தொடர்பாக சுமார் 500 ஆண்டு பிரச்சனை என்பது நடந்து வந்தது. வன்முறை, கலவரம், சட்ட போராட்டம் என இந்த பிரச்சனை என்பது பல்வேறு வடிவங்களில் நடந்து வந்தது.

இறுதியாக கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்பட சுமார் 10 ஆயிரம் வரை பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று காலையில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அதாவது டெல்லியில் பாபர் ரோடு உள்ளது. இந்த ரோட்டை குறிக்கும் வகையில் பாபர் ரோடு என ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் அந்த போர்டு மீது ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது.
அந்த ஸ்டிக்கரில் அயோத்யா மார்க் என எழுதப்பட்டு இருந்தது. அதாவது ‛பாபர் ரோடு' என்பதை மறைத்து அயோத்யா மார்க் என குறிக்கும் வகையில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த ஸ்டிக்கரை கிழித்தனர்.
Hindu Sena activists put a sticker of 'Ayodhya Marg' on Babar Road in Delhi. pic.twitter.com/3gTKO5ZqHA
— ANI (@ANI) January 20, 2024
#WATCH | Sticker of 'Ayodhya Marg' put up by Hindu Sena activists on Babar Road in Delhi has now been removed. pic.twitter.com/Y7eKCHd7Ar
— ANI (@ANI) January 20, 2024
பாபர் ரோடு எனும் போர்ட் மீது இந்த ஸ்டிக்கரை ஹிந்து சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அயோத்தி தொடர்பான பிரச்சனை என்பது ராமர் கோவில், பாபர் மசூதி என்ற பெயர்களிடம் தான் உருவானது. அயோத்தி ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டியதாக இந்து அமைப்பினர் தெரிவித்ததோடு மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என கூறினர்.
மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து வன்முறைகள் வெடித்த நிலையில் பெரிய அளவில் பிரச்சனை உருவானது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. தற்போது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications