டொனால்ட் டிரம்ப் படத்துக்கு வெற்றித் திலகமிட்டு டெல்லியில் இந்து சேனா சிறப்பு வழிபாடு
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெல்ல வேண்டும் என்பது இந்திய வலதுசாரிகளின் கருத்து. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக இந்தியாவின் பக்கம் நின்றவர் டொனால்ட் டிரம்ப் என்பது அவர்கள் கருத்து.

ஆனால் அமெரிக்கா வாழ் இந்தியர்களோ விசா, வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் டிரம்ப்-க்கு எதிராக இருக்கின்றனர் என்கின்றன கருத்து கணிப்பு. டிரம்ப்பை எதிர்த்து போராடும் ஜோ பிடனுக்கே அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது என்கின்றன இந்த கருத்து கணிப்புகள்.
குறிப்பாக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸ் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஆதரவளிக்க ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிலையில் கமலா ஹாரீஸின் சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தில் அவர் வெற்றி பெற சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதேபோல் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற டெல்லியில் இந்து சேனா அமைப்பின் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தினர். டொனால்ட் டிரம்ப்பின் உருவ படத்தை வைத்து அவருக்கு வெற்றித் திலகமிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி மூலமாக சீனா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்பது இந்து சேனா அமைப்பினர் நம்பிக்கை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications