புடினின் Poop Suitcase வரலாறு! 1949-ல் மலம் கழித்த சீன தலைவர்! ஆய்வு செய்த ரஷ்ய அதிபர் ஸ்டாலின்
சென்னை: தனது மலத்தை வைத்து உடல்நலத்தை கண்டறிந்து விடுவார்களோ என்ற அச்சம், விளாடிமிர் புடினுக்கு வர காரணமே 1949 ஆம் ஆண்டு சீன அதிபருக்கு நடந்த அந்த சம்பவம்தான் என்கிறார்கள்.

இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக இரு நாட்கள் வந்திருந்தார் விளாடிமிர் புடின். எந்த நாட்டிற்குச் சென்றாலும் புடின் கழிக்கும் மலத்தை அவரது பாதுகாப்பு படையினர் சேகரித்து அதை சூட்கேஸில் போட்டு மாஸ்கோவுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள்.
மலத்திற்கு கூடவா இத்தனை பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மலத்தை வைத்து புடினுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளை அந்த நாட்டு உளவுத் துறை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.
1999ஆம் ஆண்டு முதல்
1999ஆம் ஆண்டு இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதாம் பொதுவாக மலத்தை ஆய்வு செய்து அந்த நபருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்ற அளவுக்கு கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள்.
மலத்தை வைத்து என்ன செய்யலாம்
புடின் அஞ்சும் அளவுக்கு இதுவரை வேறு யாருடைய மலத்தை வைத்தாவது இது போன்று உடல்நல பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: வரலாற்றில் மலத்தை வைத்து மற்றொரு நாட்டு தலைவரை கண்காணித்த செயலும் ரஷ்யாவில் தான் நடந்தது. 1949 ஆம் ஆண்டு சீன நாட்டு தலைவர் மா சே துங் (Mao Zedong) ரஷ்யாவுக்கு நட்புமுறை பயணமாக வந்த போது பத்து நாட்கள் தங்கினார்.
ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் (Josef Stalin)
அப்போது ரஷ்ய அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலினின் உத்தரவுப்படி, சீன நாட்டு தலைவர் கழித்த மலத்தை ரஷ்ய உளவு அமைப்பு, பரிசோதனை செய்தனர். அக்காலத்தில் இருந்து தலைவர்களின் மலத்தை பரிசோதனை செய்து அவர்களை அங்குலம் அங்குலமாக ஒற்றரிந்து கூறவென தனி ஆய்வுக்கூடத்தை ரஷ்ய அதிபர் நடத்தி வந்தார்.
அமைதியான நபர்
ஒருவரது மலத்தில் ட்ரிப்டோஃபேன் அதிகமாக வந்தால் அவர் அமைதியான நபர் என்றும் அவரது மலத்தில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் முறையாக தூக்கமில்லை என்றும் அறியப்பட்டது. இது குறித்து அறிந்த மா சே துங் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். நாம் தான் சாதாரண மலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மலத்தை வைத்து என்னென்ன செய்திருக்கிறார்கள் செய்கிறார்கள் என்று எண்ணும் போது மலைப்பு தான் மிஞ்சுகிறது. ஏன் புதின் அவர்களது மலம் கூட சூட்கேஸில் இத்தனை பாதுகாப்பாக மீண்டும் ரஷ்யா செல்கிறது என இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு பரூக் தெரிவித்துள்ளார்.
விசேஷ பரிசோதனை கூடம்
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் தொடங்கி வைத்த அந்த விசேஷ பரிசோதனை கூடத்தை அவருக்கு பிறகு வந்த கம்சோமோல்ஸ்கயா பிரவ்டா என்பவர் மூடிவிட்டார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக புடினின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் எழுந்துள்ளன. மேலும் கடந்த ஆண்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் புடின் தன் கால்களை ஆட்டியது பலரது கவனத்தை பெற்றது. அது போல் இருக்கையில் அமர்ந்த போது அவர் நெளிந்தார். இதனால் புடினின் உடல் நிலைக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications