Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வரலாறு கனிவாக இருக்கும்".. மன்மோகன் சிங்கின் இந்த ஒரு போட்டோ.. ஏன் வரலாற்றில் இடம்பெறும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் டெல்லி நிர்வாக மசோதாவிற்கு எதிராக வாக்களிப்பதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்ய சபாவிற்கு வருகை புரிந்தது பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இப்போது எதிர்கட்சிக்களும்.. ஊடகங்களும் என்னை இகழலாம்.. ஆனால் வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும்.. இந்த வார்த்தைகளை கூறியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். தனது இரண்டாம் ஆட்சி காலத்தின் இறுதியில்.. காங்கிரஸ் ஆட்சி முடிவிற்கு வரும் என்பதை கண்கூடாக பார்த்தவர் சொன்ன வார்த்தைகள் இவை.

 History will be kinder to me: Why this picture of Manmohan Singh will stay in history forever?

ஆனால் அதன்பின் கடந்த வருடங்களில் பல முறை மன்மோகன் சிங் எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்து இருக்கிறார், எவ்வளவு சிறப்பாக பிரச்சனைகளை கையாண்டு இருக்கிறார் என்பது நிரூபணம் ஆனது. அவர் சொன்னது போலவே வரலாற்றில் மன்மோகன் சிறந்த பிரதமராகவும், சிறந்த மனிதராகவும் அவர் வாழ்நாளின் போதே நினைவு கூறப்பட்டு வருகிறார்.

அமைதியாக இருந்ததால் மவுன மோகன் சிங் என்று கிண்டலடிக்கப்பட்ட.. அவர் எவ்வளவு நேர்த்தியாக நாட்டை ஆண்டு இருக்கிறார். பேச்சை குறைத்துவிட்டு செயலில் அவர் கவனம் செலுத்தி இருக்கிறார் என்பது கடந்த சில வருடங்களாக அரசியல் விமர்சகர்கள் பலராலும் நினைவு கூறப்பட்டு வருகிறது.

டெல்லி மசோதா: அதற்கு ஒரு உதாரணமாக.. வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என்று அவர் கூறியதை மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றது. அதன்படி நேற்று ராஜ்ய சபாவில் டெல்லி யூனியன் பிரதேச நிர்வாக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லி நாட்டின் யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. எனினும், உச்ச நீதிமன்றம் உத்தரவு வெளியான உடனேயே, இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த நிலையில்தான் அதன் மசோதா முன்பு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுக , காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று திமுக எம்பி சிவா பேசினார். அதே சமயம் இந்த மசோதாவிற்கும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங்: இந்த மசோதா பெரிதும் கவனம் பெற்ற நிலையில்.. அங்கே வீல் சேரில் வந்து அமர்ந்த நபர்.. எல்லோரின் பார்வையையும் நேற்று தன்பக்கம் திருப்பினார். அவர்தான் மன்மோகன் சிங். 91 வயதில்.. நேற்று வீல் சேரில் ராஜ்ய சபாவில் இந்த மசோதாவை எதிர்த்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அயர்ந்த கண்களுடன் அவர் வந்து அமர்ந்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி நாடாளுமன்றம் தாண்டி அவரின் இந்த செயல் தேசம் முழுக்க கவனிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி: மன்மோகன் சிங் ஆட்சி முழுக்க அவரை பாஜகவை விட அதிகம் எதிர்த்தது ஆம் ஆத்மி கட்சிதான். அவர் ஒரு தோற்றுபோனவர் என்று ஆம் ஆத்மி கட்சி பல இடங்களில், பல முறை அவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஆனால் அதே ஆம் ஆத்மி கட்சிக்காக நேற்று தள்ளாத வயதிலும் மன்மோகன் அவைக்கு வந்து.. மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்.

அவரின் இந்த தீரமான செயல் அரசியல் கடந்து பலரையும் கவர்ந்து உள்ளது. முக்கியமாக இந்த வயதில் அவர் அவைக்கு வந்து மசோதாவை எதிர்த்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+