பிரதமர் மோடி பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டத்தில்.. இவைதான் விவாதிக்கப்பட்டது.. டிஆர் பாலு பளிச்
டெல்லி: 19 நாட்கள் மட்டுமே நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய டி ஆர் பாலு, நீட் தொடங்கி விலைவாசி உயர்வு வரை 13 பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளதாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் நாளை முதல் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகத் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

ஆலோசனைக் கூட்டம்
இந்தநிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

19 நாட்களில் 31 மசோதா
இந்த கூட்டம் முடிந்த செய்தியாளர்களிடம் பேசிய டி ஆர் பாலு, "19 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசும் நேரம் குறைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எல்லைப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஆகிய மூன்று பிரச்சினை குறித்து முக்கியமாகக் கேள்வி எழுப்பவுள்ளோம்.

கவன ஈர்ப்பு தீர்மானங்கள்
மேலும், தமிழ்நாடு நலன் குறித்த பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளோம். நீட் தேர்வில் விலக்கு, மருத்துவ படிப்புகளில் ஆல் இந்தியா கோட்டாவில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, மேகதாது என மூன்று கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொண்டு வரவுள்ளோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்வரிடம் ஒரு மாதிரியும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரிடம் வேறு மாதிரியும் பேசுகிறார்கள். எனவே நாடாளுமன்றத்தில் இது குறித்து மத்திய அமைச்சர்கள் விளக்கம் தரட்டும்.

13 பிரச்சினைகள்
ஒவ்வொரு முறையும் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்களை விவாதத்துக்கு எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். ஆனால் இந்த முறை அப்படி நடக்க அனுமதிக்க மாட்டோம். மேலும் பல மாதங்களாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, நியூட்ரினோ, பொருளாதார வீழ்ச்சி, ஸ்டேன் சுவாமி மரணம் உள்ளிட்ட 13 பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளோம். இவை குறித்து தான் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டது" என்றார்.
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications