Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகம் எப்படி மாறிடுச்சி பாருங்க.. "டிண்டர் டேட்டிங் ஆப்பை" தப்பா பயன்படுத்தி பறிபோன வாலிபர் உயிர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டேட்டிங் செயலிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் இருக்கும் ஆபத்துகளை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான ஆவணப்படமும் வெளியாகியுள்ளது.

இப்போது ஆன்லைன் டேட்டிங் தளங்களின் பயன்பாடு இந்தியாவில் வேகமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

 How a dating app love with full of lie ends up with murder of 28-Year-Old Man

இதில் பலருக்கும் தங்கள் பார்ட்னர்களை கண்டுபிடிக்க முடியும் போதிலும், சிலருக்கு இதனால் ஆபத்தும் ஏற்படுகிறது. அதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் குறித்த ஆவணப்படம் இப்போது வெளியாகியுள்ளது.

டேட்டிங்: 28 வயதான துஷ்யந்த் ஷர்மா என்பவர் டிண்டரில் பிரியா சேத் என்பவரைப் பார்த்துள்ளார். இருவருக்கும் பல விஷயங்கள் ஒரே மாதிரி இருந்த நிலையில், அவர்கள் இருவரும் பேச தொடங்கினர். 3 மாதங்கள் அவர்கள் அந்த செயலியிலேயே சாட் செய்துள்ளனர். இதையடுத்து ஒரு நாள் அவர்கள் நேரடியாகச் சந்திக்க முடிவு செய்துள்ளனர். பிரியா சேத் சொன்ன இடத்தில் சந்திக்க துஷ்யந்த் ஷர்மா ஒப்புக் கொண்டார். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

கடந்த 2018 பிப். மாதம் இருவரும் பேசி பழகத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இந்த உறவு முழுக்க முழுக்க பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. முதல் டெக்ஸ்ட் முதலே இருவருமே தங்களைப் பற்றி பொய்யான தகவல்களையே பகிர்ந்துள்ளனர்.

எல்லாமே பொய்: இதில் துஷ்யந்த் ஏற்கனவே திருமணமானவர். இருந்தாலும் பெண்களை ஏமாற்றித் திருமணமாகவில்லை எனச் சொல்லியுள்ளார். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவர் டெல்லியைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபர் போலத் தன்னை காட்டிக் கொண்டுள்ளார். தனது பெயர் விவான் கோலி என்றும் அவர் கூறியிருக்கிறார். மறுபுறம் பிரியாவுக்கு துஷ்யந் மீது ஆர்வம் எல்லாம் இல்லையாம். துஷ்யந்தை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என் நோக்கத்துடன் மட்டுமே பிரியா அவருடன் பேசியுள்ளார்.

துஷ்யந்த்தை சந்திக்க வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்த பிரியா அங்கே சந்திக்கலாம் எனக் கூறியுள்ளார். அதை நம்பி துஷ்யந்த் அங்கே சென்ற நிலையில், தனது கூட்டாளிகளான திக்ஷாந்த் கம்ரா மற்றும் லக்ஷ்யா வாலியா ஆகியோரின் உதவியுடன் பிரியா அவரை கடத்தியுள்ளார்.

10 லட்ச ரூபாய்: அதன் பிறகே துஷ்யந்த் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் இல்லை என்பது பிரியாவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தெரிய வந்துள்ளது. பணம் கேட்டு அவரது குடும்பத்திற்குக் கால் செய்த போதே இந்த உண்மை அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. துஷ்யந்தின் குடும்பத்தினரிடம் 10 லட்ச ரூபாய் கேட்டுள்ளனர். இருப்பினும், அதை அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரியா அவரை பலமுறை கத்தியால் குத்தியும், தலையணையால் நெரித்தும் கொன்றார்.

இது தொடர்பாக துஷ்யந்தின் தந்தை ராமேஷ்வர் பிரசாத் சர்மா கூறுகையில், "எனது மகனின் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, அப்பா, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள், தயவுசெய்து அவர்களுக்கு ரூ 10 லட்சம் கொடுத்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று எனது மகன் கூறினார். உடனடியாக போனை பிடுங்கிய பிரியா ஆபாசமாக என்னைத் திட்ட ஆரம்பித்தார்.

துஷ்யந்தை உயிருடன் பார்க்க வேண்டும் என்றால் எனது வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சத்தை டெபாசிட் செய்யும்படி கூறினார். என்னிடம் அப்போது அவ்வளவு பணம் இல்லை, ஆனால் மாலை 4 மணிக்குள் ₹ 3 லட்சத்தை ஏற்பாடு செய்வதாகச் சொன்னேன். அதன்படி 3 லட்சத்தை எனது மகனின் கணக்கில் போட்டேன்" என்றார்.

கொடூரம்: துஷ்யந்தின் டெபிட் கார்டை பிடுங்கிய பிரியா, மிரட்டிய பின் நம்பரையும் வாங்கிவிட்டார். ரூ. 3 லட்சத்தை துஷ்யந்தின் அப்பா போட்ட உடன், முதலில் ரூ.20,000 எடுத்து செலவு செய்துள்ளனர். இருப்பினும், திடீரென இது வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்று அஞ்சிய அவர்கள். துஷ்யந்தைக் கொன்றனர். அவரது உடல் ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2018 மே 4ஆம் தேதி சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் விரைவில் பிரியாவை கைது செய்தனர். பிரியாவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்துப் பிரியா கூறுகையில், "அவர் தனது உண்மையான பெயரைக் கூட என்னிடம் சொல்லவில்லை, மிகவும் பணக்காரர் என்றே சொன்னார். நான் அப்போது திக்ஷாந்துடன் லிவ்-இன் உறவில் இருந்தேன்,

திக்ஷாந்துக்கு ₹ 21 லட்சம் கடன் இருந்தது. அப்போது தான் துஷ்யந்த் என்னிடம் பேசத் தொடங்கினார். அவர் பெரிய தொழிலதிபர் போலக் காட்டிக் கொண்டதால் அவரை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டோம்" என்றார்.

கொலை ஏன்: அவரது தந்தை பணம் அனுப்பிய பிறகும் கொலை செய்தது ஏன் என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிரியா, "உண்மையில் பணம் வருவதற்கு முன்பே நாங்கள் அவரைக் கொன்றுவிட்டோம். போலீசிடம் மாட்டிவிடுவோமோ என்ற அச்சம் இருந்தது. முதலில், கழுத்தை நெரித்தும் கொல்ல முயன்றோம். ஆனால் தப்பித்துவிட்டார். அதன் பிறகே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தோம்" என்றார்.

துஷ்யந்த் சர்மா கொலை வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அவர்கள் மூன்று பேரும் குற்றவாளிகள் என்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ஜெய்ப்பூர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+