ஓட்டை பிரிச்சு.. ஓட்டைய போட்டு! பீகாரில் 3 கட்சிகள் செய்த சம்பவம்! காங்.,+ஆர்ஜேடி மண்ணை கவ்வ காரணம்?
டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ், அசாதுதீன் ஓஐசியின் ஏஐஎம்ஐஎம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி படுதோல்வியை சந்திக்க காரணமாகி உள்ளன. எந்தெந்த தொகுதியில் இந்த மூன்று கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தியது? அங்கெல்லாம் மெகா கூட்டணியின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
இந்தியா முழுமைக்குமே பீகார் சட்டமன்றத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. பலமுறை கூட்டணி மாறிய நிதிஷ் குமார் இந்தமுறை பாஜக ஆதரவோடு மீண்டும் களம் இறங்கினார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நிதிஷ் குமார் மாறி மாறி கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதீஷ் குமார் ஒரு மண் குதிரை என எதிர்கட்சிகள் விமர்சித்து இருந்த நிலையில் அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மொத்தம் 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 202 தொகுதிகளை வென்று என்டிஏ கூட்டணி சாதனை படைத்தது.

பீகார் தேர்தல் தோல்வி
அதே நேரத்தில் மெகா கூட்டணி என்ற பெயரோடு களம் இறங்கிய காங்கிரஸ் ஆர்ஜேடி வெறும் 35 தொகுதிகளை மட்டுமே வென்றது. மேலும் இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ், அசாதுதீன் ஓவசியின் ஏஐஎம்ஐஎம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று கட்சிகளும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், மெகா கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஜான் சுராஜ்
பிரசாந்த் கிஷோரின் ஜான்சுராஜ் 238 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட 230 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே அந்த கட்சி பெற்றிருந்தாலும், ஒரு தொகுதியில் இரண்டாவது இடத்தையும், ஒரு தொகுதியில் மூன்றாவது இடத்திலும், மற்றொரு தொகுதியில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. ஆனால் 33 தொகுதிகளில் வெற்றி வாக்கு வித்தியாசத்தை விட, ஜன்சு ராஜ் கட்சி அதிக வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அங்கெல்லாம் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் மெகா கூட்டணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ்
இதேபோல மாயாவதியின் பகுஜன் சமாஜ் 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரே ஒரு எம்எல்ஏ தொகுதியில் மட்டும் வென்றது. ஒரு தொகுதியில் இரண்டாம் இடம் கிடைத்தது. கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதம் வெற்றிக்கான வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 20 தொகுதிகளில் என்டிஏ 18 தொகுதிகளில் வென்றிருக்கிறது. இதனால் பகுஜன் சமாஜ் பெற்ற வாக்குகள் என்டிஏக்கு ஆதரவாகவும், மெகா கூட்டணிக்கு எதிராகவும் அமைந்திருக்கிறது.
ஏஐஎம்ஐஎம் தாக்கம்
இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது அசாதுதீன் ஓவைசின் ஏஐஎம்ஐஎம் கட்சி தான். காரணம் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த கட்சி ஓரளவு வாக்குகளை பிரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் 20% இஸ்லாமிய வாக்குகள் இருக்கும் நிலையில் அதில் 80 சதவீத வாக்குகளை ஏஐஎம்ஐஎம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒன்பது தொகுதிகளில் மெகா கூட்டணியில் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளது. ஒன்பது தொகுதிகளில் என்டிஏ ஜெயித்த வாக்கு வித்தியாசத்தை விட, ஏஐஎம்ஐஎம் பெற்ற வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மெகா கூட்டணி தங்களது 30 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.
மெகா கூட்டணி தோல்வி
கடந்த தேர்தலில் வென்ற ஐந்து தொகுதிகளை ஏஐஎம்ஐஎம் இந்த முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று கட்சிகளும் போட்டியிட்டதால் என்.டி.ஏ. கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் சென்றுள்ளதோடு வாக்குகள் பிரிக்கப்பட்டதால் மெகா கூட்டணியின் வாக்குகள் சிதறி உள்ளது. இஸ்லாமிய வாக்குகளை ஏஐஎம்ஐஎம் கட்சியும், தலித் - மகா தலித் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சியும் வெகுவாக பிரித்துள்ளது. இளம் வாக்காளர்கள், நடுத்தர மக்கள், மாற்றம் தேடியவர்களின் வாக்குகளை பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் பிரித்ததால் என்.டி.ஏ.வுக்கு சாதகமாகவும் மெகா கூட்டணிக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது .மேலும் பெண்களுக்கான வாக்குகள் ஒட்டுமொத்தமாக என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றதும் மெகா கூட்டணியின் படுதோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications