அலற விட்ட இந்தியா! அஜித் தோவல் + 2 ரஃபேல் விமானங்கள்! ஷேக் ஹசீனா பாதுகாப்பாக வந்தது எப்படி? பின்னணி
டெல்லி: வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் தான் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்தது எப்படி? அவரை ஏன் நம் நாடு 2 ரபேல் போர் விமான பாதுகாப்புடன் நம் நாட்டுக்கு அழைத்து வந்தது எப்படி? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவர் நம் நாட்டுடன் தொடர்ந்து நல்லுறவில் இருந்து வந்தார். இந்நிலையில் தான் அந்த நாட்டில் வங்கதேசம் உருவாக போராடிய தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடர்பான விஷயத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த இடஒதுக்கீட்டை வழங்க கூடாது என மாணவர்கள் கடந்த ஜூலை முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாறியது. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து மாணவர்கள் போராட்டம் வன்முறையான நிலையில் நேற்று ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹெலிகாப்டரில் இந்தியா வந்தார். கடும் அச்சுறுத்தலுக்கு நடுவே அவர் அந்த நாட்டு விமானப்படையின் C-130 J ரக விமானத்தில் நம் நாட்டுக்கு வந்தார். இங்கு தற்காலிகமாக தங்கும் ஷேக் ஹசீனா விரைவில் பிரிட்டனில் தஞ்சமடைய உள்ளார்.
இந்நிலையில் தான் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்தது எப்படி? அவரை எப்படி இந்தியா பாதுகாப்பு வழங்கியது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஷேக் ஹசீனாவின் பாதுகாப்புக்காக இந்தியா பெரிய ரிஸ்க் எடுத்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசத்தில் நேற்று மாணவர்களின் போராட்டம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. மாணவர்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நுழையலாம் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக வேறு நாட்டுக்கு தஞ்சமடைய முடிவு செய்தார்.
அதன்படி அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் அவரை எதிர்க்கிறது. அதேபோல் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஷேக் ஹசீனா கொண்டுள்ளார். அதேபோல் இலங்கை செல்வதை அவர் பாதுகாப்பாக நினைக்கவில்லை. இதனால் ஷேக் ஹசீனா நட்பு நாடான இந்தியாவுக்கு வர தயாரானார். இதையடுத்து அவர் அந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான C-130 J ரக விமானத்தில் இந்தியா நோக்கி புறப்பட்டு வந்தார்.
பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் அல்லது விமானம் இன்னொரு நாட்டின் வான்வெளி பரப்பில் அனுமதியின்றி நுழைய கூடாது. அப்படி பறந்தால் சம்பந்தப்பட்ட நாடு அதனை சுட்டி வீழ்த்தலாம். இத்தகைய சூழலில் தான் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று மதியம் 3 மணியளவில் இந்திய வான்வெளி பரப்பை நோக்கி மிகவும் தாழ்வாக வங்கதேசத்தின் விமானம் பறந்து வருவதை நம் நாட்டு விமானப்படையினர் அறிந்தனர். நம் நாட்டின் விமானப்படை ரேடார்கள் இதனை கண்டுபிடித்து சிக்னல் செய்தது.
மேலும் அந்த விமானத்தில் ஷேக் ஹசீனா இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். வங்கதேசத்தில் நிலைமை மோசமான நிலையில் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு வருவதை விமானப்படை உணர்ந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்பாக நம் நாட்டில் தரையிறங்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக இந்தியா செய்ய தொடங்கியது. அதன்படி நம் நாட்டின் வான்வெளி பரப்புக்குள் நுழைய அனுமதி வழங்கிறது.
அதுமட்டுமின்றி ஷேக் ஹசீனாவின் பாதுகாப்புக்காக 2 ரஃபேல் போர் விமானங்களை உடனடியாக இந்திய விமானப்படை அனுப்பி வைத்தது. அதாவது ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மேற்கு வங்க மாநிலம் ஹஷிமாரா விமான தளத்தின் 101வது படைப்பிரிவில் இருந்து 2 ரஃபேல் போர் விமானங்கள் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானங்கள் ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
தொடர்ச்சியாக விமானங்கள் வானில் பறந்தபடி தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருந்தது. இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தின் தலைவர்களான ஏர் ஷிப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் விமானம் உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக மாலை 5.45 மணிக்கு தரையிறங்கியது
இதையடுத்து நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் வங்கதேசத்தில் நிலவும் நிலைமை, ஷேக் ஹசீனாவின் அடுத்தக்கட்ட பிளான் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு அஜித் தோவல் அதுபற்றிய விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் அஜித் தோவல் இதுபற்றி விளக்கினார்.
மேலும் ஷேக் ஹசீனாவுக்கு ஏன் இந்தியா அனுமதி வழங்கியது. மேலும் தற்காலிகமாக தங்க அனுமதி வழங்கி உள்ளது? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதன் பின்னணியில் ஷேக் ஹசீனா இந்தியாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தது தான் காரணம். அதாவது வங்கதேசத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் பிரதமராக ஷேக் ஹசீனா தான் இருந்து வருகிறார். அன்று முதல் அவர் தொடர்ந்து நம் நாட்டுடன் நல்லலுறவில் உள்ளார்.
ஒரு காலத்தில் வங்கதேசத்தில் இருந்து பயங்கரவாதிகள் மூலம் நம் நாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் அந்த அச்சுறுத்தல் இல்லாமல் போனது. இது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. அதேபோல் நமக்கு எதிரான சதித்திட்டங்களை செய்து வரும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அவர் இணக்காம செயல்படவில்லை. மேலும் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்று 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் ஷேக் ஹசீனா 2 முறை நம் நாட்டுக்கு வந்து சென்றார். இத்தகைய சூழலில் தான் உயிர் பயத்தில் வங்கதேசத்தில் இருந்து புறப்பட்ட ஷேக் ஹசீனாவை நம் நாட்டு விமானப்படை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதோடு, நம் நாட்டு அரசு அவருக்கு தற்காலிகமாக தங்க வாய்ப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications