Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிமிடத்திற்கு 3,000 பேருக்கு கொரோனா.. தினசரி 25 ஆயிரம் பேர் பலி! சீனாவை சூழும் இருண்ட காலம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. அங்கு மருத்துவமனைகள் முழுக்க கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. இருப்பினும், வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டது. இப்போது தான், வேக்சின் பணிகள் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

இந்த நேரத்தில் சீனாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் எங்கு உலகெங்கும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து, அடுத்த அலை உருவாகக் காரணமாக அமையுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

சீனா

சீனா

சீனாவில் இத்தனை காலம் ஜீரோ கோவிட் பாலிசி அமலில் இருந்தது. அதாவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலே, மினி லாக்டவுன் அமல்படுத்தப்படும். தொடர்புடைய அனைவருக்கும் தனிமைப்படுத்தப்படுவார்கள். உலகமே கொரோனாவுடன் இணைந்து வாழப் பழகச் சொன்னாலும் கூட சீனா இந்த ஜீரோ கோவிட் பாலிசியை தான் கடைப்பிடித்து வந்தது. இருப்பினும், இதனால் தங்கள் பொருளாதாரம் பாதிப்பதாகக் கூறி, மக்கள் போராட்டம் அதிகரித்தது. இதையடுத்து வேறு வழியின்றி அனைத்து கட்டுப்பாடுகளையும் சீனா நீக்கியது. இப்படி திடீரென கட்டுப்பாடுகளை நீக்கியதே பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.

தினசரி 25 ஆயிரம் பேர் பலி

தினசரி 25 ஆயிரம் பேர் பலி

சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு மருத்துவமனைகள் முழுக்க கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. இருப்பினும், அங்கு வைரஸ் பாதிப்பு வரும் காலங்களில் மேலும் உச்சம் தொடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 13ஆம் தேதி சீனா முதல் உச்சத்தை எட்டும் என்றும் அப்போது தினசரி பாதிப்புகள் 37 லட்சமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதில் இருந்து 10 நாட்கள் கழித்து உயிரிழப்புகள் உச்சம் தொடும் என்றும் அப்போது தினசரி உயிரிழப்புகள் 25 ஆயிரமாக இருக்கும் என்றும் இங்கிலாந்தின் ஆராய்ச்சி நிறுவனமான Airfinity தெரிவித்துள்ளது.

நிமிடத்திற்கு 2900 பேருக்கு பாதிப்பு

நிமிடத்திற்கு 2900 பேருக்கு பாதிப்பு

அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து பிப் மாதம் 10 லட்சமாகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் பிறகு ஏற்படும் இரண்டாம் அலை அதை விட மோசமாக இருக்கும்.. வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து மார்ச் 3ஆம் தேதி 42 லட்சம் வரை செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது நிமிடத்திற்கு 2900 பேருக்குப் பாதிப்பு ஏற்படும். ஏர்ஃபினிட்டியின் மாடல் சீனாவின் பிராந்திய மாகாணங்களின் தரவை அடிப்படையாகக் கொண்டதாகும். ஜீரோ கோவிட் பாலிசியை கடைப்பிடித்து நீக்கிய நாடுகளில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை வைத்து இது கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அலைகள்

இரண்டு அலைகள்

சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காயில் இப்போது வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இங்கு அடுத்த ஓரிரு வாரங்களில் உயிரிழப்புகள் அதிகரிக்கும். இதுவே முதல் அலைக்குக் காரணமாகும். அடுத்து மற்ற நகரங்களிலும் மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும். குறிப்பாக மார்ச் 3இல் அதிகபட்சமாகத் தினசரி வைரஸ் பாதிப்பு 42 லட்சத்தை எட்டும். இப்படி மற்ற மாகாணங்களில் ஏற்படும் பாதிப்பு தான் இரண்டாம் அலைக்குக் காரணமாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

அங்குள்ள முக்கிய மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. பல தலைமுறைகளில் இல்லாத அளவுக்குப் பாதிப்பு இருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அங்குப் பொதுமக்களுக்குச் சீனாவின் வேக்சின்கள் தான் இரண்டு டோஸ் செலுத்தப்பட்டது. சீனா வேக்சின்களின் தடுப்பாற்றல் ரொம்பவே குறைவு. இதுவும் அங்கு ஒரேயடியாக கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் தான் வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அங்கு உண்மையில் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது.

சீனா

சீனா

இருப்பினும், சீன அரசு நிலைமை கட்டுக்குள்ளேயே இருப்பது போன்ற பிம்பத்தைத் தொடர்ந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்களை வெளியிடுவதையே சீனா நிறுத்திவிட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு குறித்து உண்மையான தகவல்களைச் சீனா வெளியிட வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல இந்தியா உட்பட பல நாடுகளும் சீனாவில் இருந்து வருவோருக்கு கொரோனா டெஸ்டிங்கை கட்டாயமாக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+