கடைசி நிமிடத்தில் பாஜக "பிரம்மாஸ்திரம்!" காங். திட்டம் தவிடுபொடி! ம.பி, சத்தீஸ்கரில் நடந்தது இதுதான்
டெல்லி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பெண் வாக்காளர்களே பாஜகவின் வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளனர். அது தொடர்பாக நாம் விளக்கமாகப் பார்க்கலாம்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் நேற்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்ட போதிலும், பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பலன் தரவில்லை: கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், நேரடியாகப் பணம் வழங்கும் திட்டங்கள், எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியம் என்று மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குக் காங்கிரஸ் அளித்த எந்தவொரு வாக்குறுதிகளும் பெரியளவில் பலன் அளிக்கவில்லை. அதேநேரம் மகளிருக்கு பாஜக அளித்த வாக்குறுதிகள் அங்கே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பாஜக மூத்த தலைவர்கள் "இலவசங்களை" அளிக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே இந்தத் தேர்தல் முடிவுகளும் இந்த இலவசங்கள் காங்கிரஸுக்கு எதிர்பார்த்த பலன்களைப் பெறத் தரவில்லை என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேநேரம் மறுபுறம் மத்தியப் பிரதேசத்தில் பெண் வாக்காளர்களைக் குறிவைத்து பாஜக வெளியிட்ட அறிவிப்பும், சத்தீஸ்கரில் கடைசி நிமிட பாஜகவிடம் இருந்து வந்த அறிவிப்பும் பாஜகவுக்கு பூஸ்ட் அளித்தது.
காங்கிரஸ் திட்டம்: கடந்த மே மாதம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, பெண் வாக்காளர்களுக்கு நேரடியாக நிதியுதவி அளிக்கும் வாக்குறுதியைக் காங்கிரஸ் தனது அனைத்து மாநிலங்களிலும் முன்வைத்தது. இது மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கை அதிகரிக்கும் என்றே அவர்கள் கருதினர்.
மேற்கு வங்கம் & கர்நாடகா: கடந்த 2021 மேற்கு வங்கம், 2023 கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் பெண் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மேற்கு வங்கத்தில் அனைத்து பெண் வாக்காளர்களுக்கும் 500 ரூபாய் நிதியுதவியை அளிக்கும் லட்சுமி பந்தர் திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இதுவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் அறிவித்த க்ருஹ லட்சுமி என்ற பெயரில் அறிவித்த நிதியுதவி திட்டம் மிகப் பெரிய வெற்றியைக் காங்கிரஸுக்கு பெற்றுத் தந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் பெண்களுக்கு ரூ.2000 நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்குறுதிகள்: கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்தது. முதலில் இந்தத் திட்டங்களை எதிர்த்த பாஜக, இருப்பினும், பின்னர் இதற்குக் கிடைத்த வரவேற்பைப் புரிந்து கொண்டு மத்தியப் பிரதேசம். மற்றும் சத்தீஸ்கரில் இதே போன்ற திட்டங்களை முன்மொழிந்தது.
பாஜக பிளான்: மத்தியப் பிரதேசத்தில், தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் அரசு, பெண்களுக்கான லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்திற்கான தொகையை உயர்த்தினார். அதேபோல சத்தீஸ்கரில் கடைசி நிமிடத்தில் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பாஜக அறிவித்தது. திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கரில் இந்தத் திட்டத்தை அறிவித்த நிலையில், அது தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றது. சத்தீஸ்கர் வாக்காளர்களைக் கவர இதுபோன்ற திட்டங்கள் தேவை என்று முன்னாள் முதல்வர் ராமன் சிங் தான் வலியுறுத்தினார் என்று கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இது குறித்த அறிவிப்பை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.
மாறிய வெற்றி: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக பெண்களின் பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. குறிப்பாக ம.பி மற்றும் சத்தீஸ்கரில் பெண் வாக்காளர்கள் கணிசமாக இருக்கும் நிலையில், அவர்களை முன்வைத்து பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. வாக்குப்பதிவு நேரத்தில் பெண்கள் வாக்குகள் அதிகரித்ததும் இதையே காட்டுவதாக இருந்தது.
இந்த 3 மாநிலங்களில் இருக்கும் பெண்கள் பாஜக பக்கம் தீர்க்கமாக இருப்பது போலவே விரைவில் நாடு முழுக்க பொதுமக்கள் பாஜக பக்கம் இருப்பார்கள் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்கான விடை இன்னும் சில மாதங்களில் நமக்குத் தெரிந்துவிடும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications