"ரூ.700 கோடி.." இந்தியர்களிடம் இருந்து தூக்கிய ஹேக்கர்கள்.. பின்னணியில் கமுக்கமாக இருக்கும் சீனர்கள்
டெல்லி: இந்தியர்களைக் குறிவைத்து நடக்கும் மிகப் பெரிய மோசடி இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் சீனா தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இப்போது உலகெங்கும் எல்லாமே இணையம் என்றாகிவிட்டது. இணையம் மூலமாகவே நம்மால் A டூ Z வரை செய்ய முடிகிறது. இந்த இணையம் பலரது வாழ்க்கையை எளிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.
அதேபோல மோசடி பேர்வழிகளும் இப்போது இதை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்பெல்லாம் முகமூடியை போட்டுக் கொண்டு நள்ளிரவில் வந்து கொள்ளையடிப்பார்கள். ஆனால், இப்போது இணையத்தை வைத்தே பெருந்தொகையை கொள்ளையடிக்கிறார்கள்.

ரூ. 700 கோடி: அப்படிதான் கடந்த ஓராண்டில் மட்டும் 15,000 இந்தியர்கள் இருந்து சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமாகத் தொகை இழந்துள்ளனர். இதில் சீன ஹேக்கர்களுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தொகை துபாய் மூலம் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பங்கு லெபனானை சேர்ந்த பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் அனுப்பப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் கூறுகையில், "இது தொடர்பாக மத்திய ஏஜென்சிகளை எச்சரித்து வருகிறோம். பணத்தின் ஒரு பகுதி கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு ஹிஸ்புல்லா அமைப்புக்கு அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த நான்கு பேர், மும்பையைச் சேர்ந்த மூன்று பேர், அகமதாபாத்தைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 9 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 6 பேரைத் தேடி வருகிறோம்" என்றார்.
பார்ட் டைம் வேலை: பலரும் இதுபோல மோசடி நடப்பதாகப் புகார் அளித்த நிலையில், ஹைதராபாத் போலீசின் சைபர் கிரைம் பிரிவு, கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது.. யூடியூப் வீடியோவை லைக் செய்தால்.. கூகுளில் ரிவ்யூ எழுதினால் பணம் தருகிறோம் என்று ஆரம்பத்தில் அவர்களிடம் பேசியுள்ளனர். இதை கேட்டு வருவோரிடம் பார்ட் டைம் பிஸ்னஸுக்கு முதலீடு செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லி மோசடி செய்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவரும் ₹ 5-6 லட்சத்தை இழந்துள்ளனர். முதலில் பாதிக்கப்பட்டவர்களை இந்த கும்பல் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் அணுகியுள்ளனர். தொடக்கத்தில் சிறிய தொகையாக ₹ 5,000 முதலீடு செய்தால் போதும் என்று கூறி முதலீட்டைப் பெற்றுள்ளனர். அவர்களை நம்ப வைக்க ஆரம்பத்தில் அவர்களுக்கு அதிகப் பணத்தை லாபம் எனக் கொடுத்துள்ளனர்.
எப்படி ஏமாற்றினர்: சிலருக்கு அப்படியே இரட்டிப்பாக்கி 10 ஆயிரம் கூட கொடுத்துள்ளனர். இதனால் முதலீடு செய்தவர்களுக்கும் ஒரே குஷியாகிவிட்டது. இதனால் அவர்கள் அதிக தொகையை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். அவர்கள் முதலீடு செய்த தொகை அதிக லாபத்தை அவர்களுக்கு ஈட்டி தருவது போல அவர்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், முதலீடு செய்தவர்களைப் பணத்தை எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.
கொடுக்கப்பட்ட டாஸ்க் அனைத்தையும் செய்து முடித்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். முதலீடு செய்தவர்கள் அவர்கள் லாகின் பக்கத்திற்குச் சென்று பார்த்தால் அவர்கள் பணம் அதிக ரிட்டர்னை கொடுத்தது போல இருக்கும். இதனால் அதை உண்மை என்றே அவர்கள் நம்பி தொடர்ச்சியாக முதலீடு செய்துள்ளனர். இப்படிதான் ஒவ்வொருவரையும் ஏமாற்றியுள்ளனர்.
48 போலி நிறுவனங்கள்: இதற்காக 48 போலி நிறுவனங்கள் பெயரில் அவர்கள் வங்கிக் கணக்கையும் திறந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் 584 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இது தவிர மேலும் ரூ.128 கோடியையும் மோசடி செய்துள்ளனர். இதற்காக அவர்கள் மொத்தம் 113 இந்திய வங்கிக் கணக்குகள் பயன்படுத்தியுள்ளனர். மொத்தம் இவர்கள் 700 கோடி ரூபாயை ஏமாற்றியதாகத் தெரிகிறது. இதில் ஒறு பகுதி பயங்கரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
பணம் பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டு அவை கிரிப்டோகரன்சியாகவும் மாற்றப்பட்டு உள்ளது. அவை துபாய் வழியாகச் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய மொபைல் எண்களை வைத்து இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த கணக்குகளை மோசடிக்காரர்கள் துபாயில் இருந்து ரிமோட் மூலம் இயக்கியுள்ளனர். இவர்களுக்குச் சீன ஆபரேட்டர்களுடன் தொடர்பு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இவர்களுடன் தொடர்பில் இருந்து மோசடிக்கு உதவிய 9 பேரை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக இருந்தவர்கள் சீனாவைச் சேர்ந்த கெவின் ஜுன், லீ லூ லாங்சோ மற்றும் ஷாஷா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் 128 கோடியை மோசடி செய்துள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications