அதி தீவிர புயலான "பைபர்ஜாய்.." வானில் இருந்து பார்த்தால் இப்படி தான் இருக்குமா! அடேங்கப்பா.. செம!
டெல்லி: பைபர்ஜாய் புயல் இந்தியாவின் பல பகுதிகளை வைத்துச் செய்யும் நிலையில், இந்த புயல் வானத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு கோடைக் காலத்தில் வெயில் நம்மை வைத்துச் செய்துவிட்டது. மதிய நேரத்தில் வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், பொதுமக்களால் மதிய நேரத்தில் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்தது.

இப்போது வெயில் காலம் முடிந்துள்ள நிலையில், நாட்டில் பல இடங்களில் பருவ மழை இப்போது ஆரம்பித்துள்ளது. நாட்டில் இப்போது பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பைபர்ஜாய் புயல்: குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இப்போது கனமழை பெய்து வருகிறது. பைபர்ஜாய் புயல் காரணமாக இப்போது பல இடங்களில் மழை வைத்துச் செய்து வருகிறது. இந்த புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இந்தப் பைபர்ஜாய் புயல் இப்போது குஜராத் கடற்கரையிலிருந்து 200 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் மாலை 4-8 மணிக்குள் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மிகக் கடுமையான சூறாவளி புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.. புயல் கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக மணிக்கு 115-125 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்: குறிப்பாக மதிய நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக சுமார் 120 கிராமங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், புயல் காரணமாக சில மீட்டர் வரை அலைகள் எழுகிறது என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குஜராத்தில் இந்தப் புயல் காரணமாக இப்போது பல மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பைபர்ஜாய் புயலை வானில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையிலான வீடியோ ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர் ஒருவர், பைபர்ஜாய் புயல் குறித்த போட்டோ மற்றும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Watch as a tropical cyclone forms over the Arabian Sea from these views I captured.
— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) June 13, 2023
The ISS provides a unique perspective on several natural phenomena, which can assist experts on Earth in weather monitoring.🌩️🌀
Stay safe, everyone! pic.twitter.com/dgr3SnAG0F
விண்வெளி படங்கள்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி என்பவர் தான் இப்போது அரேபியக் கடலில் பைபர்ஜாய் புயலின் படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தைப் பகிர்ந்த அவர், "நான் முன்பு உறுதியளித்தபடி, அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயலின் சில படங்களை இப்போது பகிர்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த படங்கள் தான் இது" என்று பதிவிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மேலே மேகக் கூட்டங்கள் சூழ்ந்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பைபர்ஜாய் புயல் என்று இல்லை எந்தவொரு தீவிர புயலாக இருந்தாலும் வானில் இருந்து பார்க்க கிட்டத்தட்ட இதேபோலத் தான் இருக்கும். இன்று புயல் கரையைக் கடக்கும் நிலையில், மக்களைக் காக்கவும் சேதங்களைக் குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications