'ரியல் மங்காத்தா'.. அருணாச்சலில் ஆடாமல், ஓடாமல், உட்கார்ந்தே பாஜக ஜெயித்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மங்காத்தா படத்தில் ஒரு பாடல் வரும், இது அம்பானி பரம்பரை என்று ஆரம்பிக்கும்.. ஆடாம ஜெயிச்சோமடா
நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா. ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம் என்று பாடல் வரும்.. அந்த பாடல் அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவிற்கு அப்படியே பொறுந்தும். எப்படி என்பதை பார்ப்போம்

18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் அணாசலபிரதேசத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவாகின.

Assembly Election Results 2024 Sikkim Election Results arunachal pradesh election results 2024

சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் இறங்கின.

இதில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதனால் எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த 50 தொகுதிகளில் 133 வேட் பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்

மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடந்தமுறை 41 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிப் பெற்ற பாஜக, இந்த முறையும் அதேபோன்ற வெற்றியை பெறும் என தெரிகிறது. தற்போது வரை 33 இடங்களில் முன்னிலையிலும், 2 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 45 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது,

சரி, அருணாச்சலில் பாஜக இப்படி அதிரடியாக வெற்றி பெற என்ன காரணம்.. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் பீமா காண்டு தலைமையில் 43 எம்எல்ஏக்கள் அப்படியே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அருணாச்சல மக்கள் பிரதேச கட்சியில் (அப்போது பாஜக கூட்டணி கட்சி) இணைந்தனர்.

அதாவது ஒரு மாநிலத்தில் இருந்த முதல்வர் முதல் எல்லாருமே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். காங்கிரஸ் கட்சியில் தூபம் நகி என்ற ஒரு எம்எல்ஏ தவிர அனைவரும் கட்சி மாறினார்கள்.. அன்று அழிந்த காங்கிரஸ், அதற்கு பிறகு அதில் இருந்து எழுந்திருக்கவே இல்லை.. அதேநேரம் முதல்வர் பீமா காண்டு தலைமையில் 33 எம்எல்ஏக்கள் சரியாக, அதே 2016ம் ஆண்டு டிசம்பரில் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து அருணாச்சல மக்கள் பிரதேச கட்சியும் பாஜகவால் அழிந்தது. அப்போது போல் பீமா காண்டு தான் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார்.

பீமா காண்டு எப்படி காங்கிரஸ் கட்சியை அப்படியே அழித்து பாஜகவில் இணைத்தார் என்றால் அதன் பின்னணியிலும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. 2016ல் பீமா காண்டு மீது அமலாக்கத்துறை வழக்கு இருந்தது. இதனால் அவர் பெரும் சிக்கலில் இருந்தார். அதன்பின்னர் உடனடியாக அவர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தவர் பின்னர், பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு அவர் மீது வழக்கு குறித்து சரியான தகவல்கள் இன்றுவரை தெரியவில்லை. பீமா காண்டு தன் மீதான வழக்கில் இருந்து தப்பிக்கவே பாஜகவில் இணைந்தார் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று வரை வைத்து வருகின்றன.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.. மங்காத்தா படத்தில் வரும் இது அம்பானி பரம்பரை என்று ஆரம்பிக்கும் பாடலின் படி, 9 கிரகமும் ஒன்றாக இருக்கு, ஆடாம ஜெயிச்சோமடா நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா. ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம் என்று பாடல் வருமே அந்த வரிகளின் படி, அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவிற்கு அப்படியே பொருந்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+