அம்மாவையே தோற்கடிச்சீங்களா? 12 ஆண்டு தவமிருந்து கெஜ்ரிவாலை வீழ்த்திய ஷீலா தீக்சீத் மகன்.. எப்படி?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவிடம், ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் தான் தனது தாய் ஷீலா தீக்சீத்தை 2013ல் தோற்கடித்து அவரது அரசியல் வாழ்க்கைக்கே எண்ட் கார்டு போட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை 15 ஆண்டுகள் காத்திருந்து மகன் சந்தீப் தீக்சீத் பழிவாங்கி உள்ளார். சந்தீப் தீக்சீத்தால் தான் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் கடந்த 2013 முதல் 2025ம் ஆண்டு வரை ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி தான் நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதி டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தல் முடிவு ஆம்ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

அதாவது ஆம்ஆத்மி கட்சி படுதோல்வியடைந்துள்ளது. பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் பாஜகவும், 22 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வென்றால் போதும். தற்போது பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. இதனை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். புதுடெல்லி தொகுதியில் களமிறங்கிய அவர் வெற்றி பெறவில்லை. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா மொத்தம் 30,088 ஓட்டுகள் பெற்று வென்றார். அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 ஓட்டுகள் பெற்று அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இதன்மூலம் பர்வேஷ் வர்மா, 4,089 ஓட்டுகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தி உள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்சீத் 4,568 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். கடந்த 2013ம் ஆண்டு முதல் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோட்டையாக இருந்த புது டெல்லி தொகுதி தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு பின்னணியில் மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சீத்தின் மகனான சந்தீப் தீக்சீத் தான் முக்கிய காரணம். இவர் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி 4,568 ஓட்டுகளை பெற்றார். ஒருவேளை அவர் போட்டியிடாமல் இருந்து அந்த வாக்குகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்து இருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பார்.
இதன்மூலம் 15 ஆண்டுகள் கழித்து அரவிந்த் கெஜ்ரிவாலை, பழி தீர்த்துள்ளார் ஷீலா தீக்சீத். அதாவது ஷீலா தீக்சீத் தொடர்ந்து 3 முறை டெல்லி முதல்வராக இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு புது டெல்லி தொகுதியில் அவர் போட்டியிட்டார். அப்போது தான் முதல் முதலாக ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் கால்பதித்தது. ஷீலா தீக்சீத்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால் 44,269 ஓட்டுகள் பெற்றிருந்தார். அவர் தன்னை எதிர்த்து களமிறங்கிய மறைந்த முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்சித்தை 25,864 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். அப்போது முதல்வராக தேர்தலில் களமிறங்கிய ஷீலா தீக்சீத் வெறும் 18,405 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் விஜயேந்தர் குப்தா 17,952 ஓட்டுகள் பெற்றிருந்தார் இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு ஷீலா தீக்சீத்துக்கு அரசியலில் எதிர்காலம் இல்லாத நிலை உருவானது. அதுமட்டுமின்றி டெல்லியிலும் காங்கிரஸ் கட்சி கரைய தொடங்கியது.
டெல்லியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு இப்போது செல்வாக்கு இல்லாத நிலை தான் இருக்கிறது. 2015, 2020 தேர்தலை தொடர்ந்து இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்க தயாராக இருந்தது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணி இல்லை என்று கூறி தனியாக வேட்பாளர்களை நிறுத்தினார். இது தற்போது ஆம்ஆத்மி கட்சிக்கே ஆபத்தாக முடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications