கோழிக்கோடு விமான விபத்து நடந்தது எப்படி.. 257 பக்க விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் கடந்த ஆண்டு நடந்த விமான விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    கேரளா விமான விபத்து | விமான போக்குவரத்து இயக்குநரகம் என்ன சொல்கிறது?

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயிலிருந்து கோழிக்கோடுக்கு 186 பயணிகளுடன் வந்த ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது ரன்வேயை விட்டு வெளியேறியதால் விபத்தில் சிக்கி சுக்குநூறாக உடைந்தது.

    இந்த விபத்தில் விமானி, இணை விமானி உள்பட 21 பேர் பலியாகிவிட்டனர். மற்ற 165 பேர் பத்திரமாக சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது.

    விசாரணை அறிக்கை

    விசாரணை அறிக்கை

    இந்த நிலையில் விசாரணை முடிந்த நிலையில் நேற்றைய தினம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. சுமார் 257 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் விமானத்தை விமானி தரையிறக்கும் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததே காரணம் ஆகும். விமானி விமானத்தை தரையிறக்கும் போது நிலைத்தன்மையற்ற அணுகுமுறைகளை அவர் தொடர்ந்து பின்பற்றியுள்ளார்.

    கண்காணிப்பு தொழில்நுட்பம்

    கண்காணிப்பு தொழில்நுட்பம்


    மேலும் விமான கண்காணிப்பு தொழில்நுட்பமானது விமானத்தை தரையிறக்குவதற்கு மேலும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என எச்சரிக்கை கொடுத்தது. ஆனாலும் அதை தனது புறக்கணித்துவிட்டு விமானத்தை விமானி தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஓடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியுள்ளார்.

    தொழில்நுட்ப கோளாறு

    தொழில்நுட்ப கோளாறு

    விமானத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் இயல்பாக செயல்பட்டது. எனினும் தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற காரணியை புறக்கணித்து விட முடியாது. விமானம் தரையிறங்கும் போது அது தரையிறங்கும் தூரம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து விமானி யாருடனும் ஆலோசிக்கவில்லை. வழிகாட்டும் நெறிமுறைகளை மீறிய போதிலும் ஆட்டோ பிரேக் செலக்ஷனை அவர் பயன்படுத்தவில்லை.

    நல்ல காற்று

    நல்ல காற்று

    விமானத்தை தரையிறக்கும் போது மழை பெய்ததால் அங்கு தரையிறங்க போதுமான தூரம் உள்ளதா, எதிரே உள்ளவை நன்கு தெரிகிறதா என்பதையெல்லாம் விமானி யோசிக்கவில்லை. தரையிறங்கும் தூரத்தை கணிப்பதையே அவர் தவிர்த்துவிட்டார். மேலும் விண்ட் ஷீல்டு வைபர் சரியாக இயங்கவில்லை. மழை நன்றாக பெய்து கொண்டிருக்கும் போதே இடி மின்னல் நல்ல காற்று வீசிய போதும் விமானத்தை தரையிறக்கியது முக்கிய தவறாக பார்க்கப்படுகிறது. அதில் டேபிள் டாப் ரன்வேயில் இது போன்ற ரிஸ்க்கை எடுக்கவே கூடாது.

    விமானம் தரையிறங்குதல்

    விமானம் தரையிறங்குதல்

    கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்க தொடங்கியபோது வெறும் 27 வினாடிகள் மட்டுமே வைபர் வேலை செய்தது. அதன் பின்னர் நின்றுவிட்டது. இந்த வைபர் சர்வீஸுக்கு கொடுக்காததும், மோசமான வானிலை நிலவியதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மோசமான வானிலையின் போது தரையிறங்க அனுபவம் வாய்ந்தவர்களே விமானத்தை இயக்கினார்கள். எனினும் இந்த வைபர் இயங்காதது விபத்து ஏற்பட முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+