தெலுங்கானாவில் எகிறி அடிக்கும் காங்கிரஸ்! கேசிஆர் நிலை மோசம்! அப்போ பாஜக? லோக்சபா தேர்தல் புது சர்வே
டெல்லி: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக ஏபிபி மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து தெலுங்கானாவில் நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2014இல் கொண்டு வரப்பட்ட ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு அங்கே பல அரசியல் மாற்றங்கள் நடந்துவிட்டன.

கடந்த 9 ஆண்டுகள் அங்கே கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி அசைக்கவே முடியாத நிலையில் இருந்தது. அங்கே கேசிஆருக்கு எதிரியே இல்லை என்ற சூழல் இருந்தது
தெலுங்கனா: இருப்பினும், கடந்த சில மாதங்களில் அங்கே நிலைமை மொத்தமாக மாறியது. கடந்தாண்டு இறுதியில் அங்கே சட்டசபைத் தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்பே காங்கிரஸ் அங்கு மளமளவென வளர்ந்தது. அங்கே மொத்தம் 119 சீட்கள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி 64இல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. எதிரி இல்லை என்று சொல்லப்பட்ட கேசிஆர் கட்சியால் 39 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக வெறும் 8 சீட்களில் மட்டுமே வென்றது.
புதிய சர்வே: இதற்கிடையே இப்போது ஏபிபி சிவோட்டர் இணைந்து நடத்திய புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 லோக்சபா இடங்கள் இருக்கும் நிலையில், அதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 10 லோக்சபா தொகுதிகளில் கிடைக்கும் என்று ஏபிபி சிவோட்டர்ஸ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு 4 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதில் 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கேசிஆர் கட்சிக்குத் தான் பெரிய ஷாக்.. அவரது பிஆஎர்எஸ் கட்சிக்கு வெறும் 3 இடங்கள் தான் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஒவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு ஒரு இடம் தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதம்: வாக்கு வங்கி என்று வரும் போது காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 43% வாக்குகள் கிடைக்குமாம். பாஜகவுக்கு 25% வாக்குகள் கிடைக்கும் நிலையில், பிஆர்எஸ் கட்சிக்கு 28% வாக்குகளும் மஜ்லீஸ் கட்சிக்கு 2% வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 4 இடங்கள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்கள் கிடைத்தன. அதேபோல மஜ்லீஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. வாக்கு வங்கி என்று வரும் போது 2019இல் பிஆர்எஸ் கட்சிக்கு 41% வாக்குகள் கிடைத்தன. பாஜகவுக்கு சுமார் 20% வாக்குகள் கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு 29% வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
2019 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் கட்சிக்கு தான் இங்கே மிகப் பெரிய லாபம். 2019இல் வெறும் 3 இடங்களில் வென்ற காங்கிரஸ் இம்முறை 10ஐ கைப்பற்றும். அதேநேரம் பிஆர்எஸ் கட்சி கடந்த முறை வென்றிருந்த நிலையில், இந்த முறை வெறும் 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது,
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications