டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் ராணுவம் விரித்த வலையில் எப்படி சிக்கினார் அபினந்தன்? நடந்தது இதுதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!- வீடியோ

    டெல்லி: இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானத்தை பாகிஸ்தான் தாக்கி அழித்ததை, இந்தியா உறுதி செய்துள்ளது.

    இந்திய விமானம் எவ்வாறு பாகிஸ்தான் தாக்குதலுக்கு உள்ளானது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானங்கள் நேற்று அதிகாலை தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பி வந்தன.

    போர் விமானங்கள்

    போர் விமானங்கள்

    இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தனது எப்-16 வகை விமானங்களை வானில் வட்டமடிக்க விட்டு இந்தியாவை வெறுப்பேற்றியது. இந்திய எல்லைக்குள் புகுந்து வருவதற்கு 3 எப்-16 விமானங்கள் முயற்சி செய்தன. பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்பார்த்து இருந்த இந்திய போர் விமானங்கள் அவற்றுக்கு பதிலடி கொடுக்க தயாராகின.

    விரட்டிய விமானங்கள்

    விரட்டிய விமானங்கள்

    மொத்தம் ஆறு மிக்-21 வகை போர் விமானங்கள் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை இந்திய வான் எல்லைக்குள் வரவிடாமல் விரட்டின. வெற்றிகரமாக விரட்டியடித்த பிறகு, அதில் 5 விமானங்கள் தங்களது தளத்திற்கு திரும்பி வந்து விட்டன. ஆனால் ஒரு, மிக்-21 பைசன் வகை விமானம் மட்டும் திரும்பி வரவில்லை. அதை விமானி அபிநந்தன் இயக்கியுள்ளார். இவரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளதாக கூறியுள்ளது.

    பாகிஸ்தான் எல்லை

    பாகிஸ்தான் எல்லை

    அதே நேரம் இந்திய வான் எல்லைக்குள் பிரவேசித்த பாகிஸ்தானின் எப் 16 ஜெட் விமானங்களில் ஒன்றை, இந்திய மிக் போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று இந்தியா அறிவித்துள்ளது. அபினந்தன் செலுத்திய விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று உள்ளது. பாகிஸ்தானின் போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது தங்கள் வான் எல்லைக்குள் இந்திய, விமானம் வந்ததும் பாகிஸ்தான் தரைப்படை இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளது.

    வலை விரித்து பிடிக்கப்பட்ட புலி

    வலை விரித்து பிடிக்கப்பட்ட புலி

    அதாவது வலையை விரித்து வைத்து புலியை பிடிப்பது போல நமது வீரர் அபினந்தன் செலுத்திய விமானத்தை, பாகிஸ்தான் தரைப்படை சுட்டு வீழ்த்தியது. இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் வந்து செல்வது இயலாத காரியம் என்பதால், வருவது போல் வந்து போக்கு காட்டிவிட்டு, அவற்றை விரட்டிச் சென்ற இந்திய போர் விமானம் தனது எல்லைக்குள் வந்ததும் குறிபார்த்து சுட்டுள்ளது.

    விடுதலைக்கு வாய்ப்பு

    விடுதலைக்கு வாய்ப்பு

    இதனால்தான் அபிநந்தன் பாகிஸ்தான் படையினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். இந்திய விமானப்படை வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்குவது புதிது கிடையாது. ஏற்கனவே கார்கில் போரின்போது இந்திய பைலட் பாகிஸ்தானிடம் சிக்கியிருந்தார். சில வாரங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Five out of the six MiG 21 aircraft, which took off from Srinagar to push back Pakistani Air Force planes, have returned to air base on Wednesday. However, one aircraft is yet to return safely to the air base.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X