ஜாக்பாட்.. 4% உயரும் அகவிலைப்படி? அப்படினா மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்?
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை கடந்த முறையை போலவே 4 சதவீதம் வரை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும்(டிஏ), ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும்.

இந்தியாவை பொறுத்தமட்டில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் டிஏ நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு என்பது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஜனவரி, ஜூலை என முன்தேதியிட்டு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தான் இந்த ஆண்டின் 2வது முறைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் தான் 7வது சம்பள கமிஷனின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி என்பது உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அது 4 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அநேகமாக நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
அதன்பிறகு இந்த அகவிலைப்படி உயர்வு என்பது 2023 ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. இதனால் தான் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன்படி தற்போது 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி என்பது 46 சதவீதத்தை தொடும்.
சரி இது இருக்கட்டும். இனி அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயர்த்தி வழங்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை நாம் பார்ப்போம். அதாவது தற்போது மத்திய அரசு ஊழியர் ஒருவர் ரூ.15 ஆயிரம் அடிப்படை சம்பளத்தில் ரூ.50 ஆயிரம் பெறுகிறார் என்றால் அவருக்கு அகவிலைப்படியாக(தற்போதைய மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் என்ற அடிப்படையில்) ரூ.6,300 கிடைத்து வருகிறது.

ஆனால் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு நடைமுறைக்கு வரும்போது அவர் கூடுதலாக ரூ.600 சேர்த்து ரூ.6,900 வரை பெறுவார். அதாவது 4 சதவீத அகவிலைப்படி உயர்வின்படி மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் ரூ.600 அதிகமாக கிடைக்கும். இதன்மூலம் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி என்பது 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த அகவிலைப்படி சதவீதம் 42 சதவீதமாக அதிகரித்தது. தற்போதைய சூழலில் பணவீக்க விகிதம் அடிப்படையில் 4 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி சதவீதம் என்பது 46 என அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications